பக்கம் எண் :

உரையாசிரியர்கள்128

உரைகள் வேண்டினர். அவ் வுரைகல்லே தமிழில் மதிப்பீடு அல்லது
மதிப்புரை எனப்படுகின்றது.”
1

     “உரையாசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் (திறனாய்வில்) மிக
மேம்பாடுற்றனர். அன்னார், பயில்வார்க்குத் தத்தம் கருத்துக்களை
அறிவியலாதவழி காட்சியளித்தும், பலவேறு கருத்துக்களில் துணிவான
கருத்துக்களைக் கூர்ந்தறியும் நெறிமுறைகளைச் சுட்டிக் காட்டியும் மதிப்பீட்டுக்
கோட்பாடுகளை (Principles of criticism) உலகறிந்து வியக்கச் செய்தனர்.”
2

        தமிழ் இலக்கணக் கொள்கைகளைத் தமிழ் இலக்கியத்திலிருந்து
உருவாக்குவதுபோல், தமிழுக்குத் தேவையான திறனாய்வு நெறிகளைத்
தமிழிலிருந்தே எடுத்து உருவாக்க வேண்டும்.
3 இக் கருத்துடைய எவரும்
பழைய உரைகளில் திறனாய்வுக் கூறுகளைக் கண்டு போற்றுவர்;
உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள் என்று மதிப்பர்.

     உரையாசிரியர்கள், கவிதையைச் சுவைக்கும் முறை, தாம் சுவைத்த
முறை, சுவைத்தபோது தமக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவம் ஆகியவற்றைத்
தம் உரைகளில் கூறியுள்ளனர். இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட புலவர்கள்
தம் ஆராய்ச்சி முடிவுகளை, உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினர். தம்
ஆராய்ச்சிக்கு, அகலவுரை விரிவுரை விருத்தி வியாக்கியானம் முதலிய
பெயர்களைச் சூட்டினர். இன்றைய திறனாய்வுத் துறையில் எத்தனை
பிரிவுகளும் வகைகளும் உள்ளனவோ அவற்றின் அடிப்படையை -
உயிர்ப்பண்பை - மூலவடிவத்தைச் சுருக்கமாக உரைகளில் காணலாம்.

     உரையாசிரியர்கள், கற்போரை மேன்மேலும் ஆராயத் தூண்டுகின்றனர்;
வினாக்களைத் தாமே எழுப்பிக் கொண்டு விடை கூறுகின்றனர்; ஐயந்தோன்ற
வேண்டிய இடங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்; ஐயங்களைப் போக்கி
அறிவை வளர்க்கின்றனர்.

     உண்மையான திறனாய்வாளர், விழிப்பு உணர்ச்சியும் நெகிழ்ந்து
கொடுக்கும் இயல்பும் உள்ளவராய்-ஊடுருவிக்


1.2. புலமை நூல் (1752) பக் - 208, 214.

3.  இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே;
   எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே;
   எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல
   இலக்கியத்தி னின்று எடுபடும் இலக்கணம்.       - அகத்தியர்