காணும் நுண்நோக்கு உடையவராய் - எல்லா உள்ளுணர்வுகளையும் விரைவில் அறியும் திறன் வாய்ந்தவராய்-மெய்ப்பொருளை உறிஞ்சிக் கொள்வதில் வல்லவராய் விளங்குதல் வேண்டும் என்பர்.* உரையாசிரியர்கள் இத்தகைய திறன்களை உடையவராய் விளங்குகின்றனர். டாக்டர் மு.வரதராசனார், பண்டைய உரைகளையும் திறனாய்வையும் தொடர்புபடுத்திச் சிறந்த கருத்துக்களைக் கீழ் உள்ளவாறு கூறுகின்றார்: “இலக்கியம் தோன்றியவுடனே ஆராய்ச்சியும் தோன்றியது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பழமையானது. இலக்கிய விருந்தை நம் முன்னோர்கள் வாரி வழங்கியுள்ளனர். தலைமுறை தலைமுறையாக-வழிவழியாக அதை நாம் பார்த்து நுகர்ந்து வருகிறோம். எழுத்தினால் எழுதிவைக்கும் பழக்கும் பிற்காலத்தில் ஏற்பட்டதே என்றாலும், ஆராய்ச்சி தொன்று தொட்டு இருந்து வருகிறது. பாட்டை, ஆராய்ச்சியாளர் புகழ்ந்தனர். அதை உலகிற்கு விளம்பரப்படுத்த முயன்றனர். உரையாசிரியர்கள் ஒருபடி முன்னே போய் இது தங்கள் கருத்து, இது இதரர் கருத்து என்று காட்டினர்.”1 தகுதியும் பண்பும் திறனாய்வாளர்களிடம் இயல்பாகவே இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவராய்-குற்றம் குணம் இரண்டையும் ஆராயும் பண்புடையவராய் இருத்தல் வேண்டும் என்பர். தமிழிலக்கிய உலகில் நடுநிலைமையின் சிறப்பைக் காலந்தோறும் எடுத்துரைக்கும் குரல்கள் ஒலித்துள்ளன: காமம் செப்பாது கண்டது மொழிமோ. -குறுந். (2) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். -குறள் (504) வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம். -சீவக சிந்தாமணி*(888) * The true critic must be mentally alert and flexible. keen in insight, quick in response to all impressions, strong in grasp of essentials-Husden. 1. தமிழ்த் தாத்தா (1959) பக். 64. |