பக்கம் எண் :

135அறிமுகம்

என்பது, உரிச் சொல் என்ற கருத்துடையவர். ஆனால், அதனைத்
தொல்காப்பியர் இடைச் சொல்லாகக் கூறியுள்ளார். (சொல்.269). இந்த
இடத்தில் சேனாவரையர், “எல் என்பது உரிச்சொல் நீர்மைத்து ஆயினும்,
ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையின், இடைச்சொல் என்று கோடும்”
என்று கூறுகின்றார். ‘நும்மின் திரிபெயர் நீயிர்’ என்ற தொல்காப்பயிர்
கருத்திற்கு மாறாக ‘நீயிர் என்பதன் திரிபு நும்’ என்ற கருத்துடையவராய்
இருந்தும், நூலாசிரியரைக் குறை கூறாமல், சேனாவரையர் உரை கண்டுள்ளார்
(சொல்.98,143).

     பேராசிரியர், நண்டிற்கு மூக்குப்பொறி உண்டு என்று மரபியலில்
தொல்காப்பியர் கூறியுள்ள கருத்தை உடன்படவில்லை. என்றாலும் அவர்,
“நண்டிற்கு மூக்கு உண்டோ எனில், அஃது ஆசிரியன் கூறலால் உண்டு
என்பது பெற்றாம்” என்று எழுதுகின்றார்.

     நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், தொல்காப்பியர் கருத்துக்கள்
இரண்டினை மறுத்துள்ளார். சகரம் மொழிக்கு முதலில் வராது என்ற கருத்தை
மறுத்து, சகரத்தை முதலாக உடைய சொற்களை அடுக்கிக்கூறி, வெண்பா
ஒன்றை இயற்றியுள்ளார். மேலும், நுத்தை என்பதில் உள்ள உகரம், மொழி
முதற்குற்றுகரம் என்ற தொல்காப்பியர் கருத்தை மறுத்துள்ளார் (நன். 105).

     இலக்கணக் கொத்தின் ஆசிரியர், நன்னூலார் கருத்தை மறுக்கின்ற
இடம் ஒன்று உள்ளது:

     “அன்றி இன்றிஎன் வினைஎஞ்சு இகரம்
      தொடர்பினுள் உகரமாய் (த்திரியும்)

என்று (நன்னூலார்) முறை கூறினார். அம் முறையே,

      வினையெச்சமே வினைமுற்று ஆகலும்

எனல் வேண்டும். அது மறந்து,

     வினைமுற்றே வினையெச்சம் ஆகலும்

என்றார். இம் மறவி உரையாசிரியர் போதக ஆசிரியரோடு மூவர்க்கும்
பொது”. (பாயிரவியல்-6)

     இலக்கிய உரையாசிரியர்களும் நூலாசிரியரின் மாறான கருத்தை
அறிந்து செப்பனிட்டுள்ளனர். நச்சினார்க்கினியர் குறிஞ்சிப் பாட்டிலும்,
சிந்தாமணியிலும் உள்ள முரண்களை அறிந்து அவற்றைச் சரிசெய்துள்ளார்.

     குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களைத் தலைவியும் தோழியும்
பறித்து வந்து மாலை கட்டிச் சூடிக் கொள்வதாய்க்