காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து நோக்கி வருங்காலத்தில் புதியதோர் உலகம் படைப்போம். தொடுவானத்தை நோக்கி...! “தமிழில் உரையாசிரியர்களின் பணி, முடிவில்லாத தொடராக நீண்டு சென்று கொண்டிருக்கிறது!”* - தமிழறிஞர் மு.சண்முகம் பிள்ளை. “உலகமெல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்த கிடக்கின்ற நள்ளிரவில், நாம் விழித்து எழுகின்றோம்!” 1947-ஆம் ஆண்டு; ஆகஸ்டு மாதம், 15-ஆம் தேதி; இரவு ஒரு மணி. அசோகச் சக்கரவர்த்தியின் தர்மச் சக்கரம் பொறித்த மூவண்ணக் கொடியைச் சுதந்திர வானத்தில் உயர்த்திப் பறக்க விட்ட ஆசியஜோதி பண்டித நேரு, மேலே உள்ள எழுச்சி மிக்க வாக்கியத்துடன் இந்தியச் சுதந்திர தின விழாவின் தொடக்கவுரையை நிகழ்த்தினர். அந்த எழுச்சிமிக்க வாக்கியம் சுதந்திர முரசின் மங்கல முழக்கமாகி ஒவ்வொரு இந்தியனின் இதய ஒலியுடன் கலந்து என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. நேருவின் எழுச்சிக்குரல், காலந்தோறும் தமிழில் புதிய உரை தோன்றியதை அறியும் போதெல்லாம் நம் நினைவுக்கு வருகின்றது. ஒவ்வோர் உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள். இறையனார் களவியலுரையின் ஆசிரியரான நக்கீரர் முதல், சிவஞான முனிவர் வரையில் உள்ளவர்களும், அவருக்குப் பின் வந்த உரையாசிரியர்களும் தமிழ் மக்களின் இலக்கியம் இலக்கணம் சமயம் கலை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு * உலகத் தமிழ் - 1981; பக்கம் - 76, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம். |