பக்கம் எண் :

உரையாசிரியர்கள்16

     உரையாசிரியர் ஒவ்வொருவருடையவும் உரைகளை இவர் நன்கு
ஊன்றிக் கற்று, அவ்வவற்றில் காணும் தனியியல்புகளையும் ஒப்புமைப்
பகுதிகளையும் பிறவியல்புகளையும் வகுத்துத் திறம்பட விளக்கிச் செல்கிறார்.
முந்திய ஆராய்ச்சியாளர் கொண்ட முடிவுகளையும் உரிய இடங்களில்
எடுத்துக் காட்டியுள்ளார்.

     உரையாசிரியர்கள் என்னும் இவ்வாய்வு நூலைப் பொதுப்பகுதி, சிறப்புப்
பகுதி என இரு பகுதியாக ஆய்வாளர் பகுத்துக் கொண்டுள்ளார். பொதுப்
பகுதியில் உரை வளர்ந்த வரலாறு, உரையாசிரியர் தந்த உரை வகைகள்
அவற்றின் பொதுவியல்புகள் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளார். சிறப்புப்
பகுதியில் உரையாசிரியர் பரம்பரையை முதல் வழி சார்பு நூல் வகையில்
பகுத்துக் காட்டத் தக்கனவற்றை வகுத்துணர்த்தியும், உரைவேற்றுமைகளையும்
மேற்கோள் பாடல்களையும் விளக்கியும் செல்கிறார்.

     இலக்கண உரையாசிரியர்கள் இலக்கிய உரையாசிரியர்கள் சமய நூல்
உரையாசிரியர்கள் எனப்பாகுபாடு செய்து கொண்டுள்ளமை இந் நூலின் ஒரு
தனிச் சிறப்பாகும்.

தமிழாய்வு -தொகுதி-1, பகுதி-1, பக்
27, 28. சென்னைப் பல்கலைக் கழக
வெளியீடு -1972.

KAMIL ZVELEBIL

                   M. V. Aravindan, the author of an
              excellent book in Tamil called “Uraiya
              ciriyarkal” Commentatiors (Madras 1968), gives
              an illustration which shows how very much is,
              in its structure Nakkirar’s prose akaval like.

                                  The Smile of Murugan,
                      “On Tamil Literature of South India”.
                                            Page - 255.