பக்கம் எண் :

உரையாசிரியர்கள்178

          அவை தாம்
         கசதப என்றா நமவ என்றா
         அகர உகரமோடு அவைஎன மொழிப

(எழுத்-170)

என்ற சூத்திரம் இளம்பூரணர் உரை இன்றேல் விளங்காது. அளவுப்
பெயர்க்குப் நிறைப் பெயர்க்கும் முதலில் வரும் எழுத்துகள் ஒன்பது. அவை:
கசதப நமவ அஉ என்பன. இவ் எழுத்துகளை முதலில் கொண்ட அளவுப்
பெயர்களாகப் பின் வருவனவற்றை இளம்பூரணர் காட்டுகின்றார்:

     கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு.

நிறைப் பெயர்கள்:

     கழஞ்சு, சீரகம், தொடி, பலம் நிறை, மா, வரை அந்தை: (உகரத்தை
முதலெழுத்தாகக் கொண்ட பெயர் இளம்பூரணர் காட்டவில்லை.
அக்காலத்திலேயே வழக்கிழந்து விட்டது. நச்சினார்க்கினியாரும் இதற்கு
உதாரணம் காட்டவில்லை.)

     எழுத்ததிகாரத்தில்,

          ஐஅம் பல்என வரூஉம் இறுதி
         அல்பெயர் எண்ணும் ஆயியல் திரியாது

(எழுத்.394)

என்ற சூத்திரத்திற்கு இளம்பூரணரின் உதவியின்றேல் பொருள் விளங்கி
இராது. “பொருட் பெயர் அல்லாத எண்ணுப் பெயராகிய தாமரை, வெள்ளம்,
ஆம்பல் என்பன” என்று இளம்பூரணர் தரும் விளக்கத்தால் சூத்திரத்தின்
பொருள் தெளிவாகின்றது.

          மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
         உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே

(எழுத்.112)

என்ற சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையைவிட இளம்பூரணர் உரையே
பொருத்தமாக உள்ளது. “மரூஉத் திரளாகிய தலை தடுமாறாக மயங்கின
இயல்பையுடைய இலக்கணத்தொடு பொருத்தின மரூஉ வழக்கும், உரியன
உள புணரும் நிலைமைக் கண்” என்பது இளம்பூரணர் உரை.

     ‘மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே’ என்னும் நூற்பாவில்
‘மகன் வினை’ என்பதற்கு, ‘மகற்குத் தாயாற் பயன்படும் நிலைமையன்றி
அவளொடு பகைத்த நிலையை’