வேதாந்தம் “முயற்சியும் தெய்வமும் ஆகிய காரணங்களுள், தெய்வம் சிறந்தமையான்” (சொல்-242). தருக்கம் “பண்போடு இவற்றிடை வேற்றுமை என்னை எனின், இன்மை பொருட்கு மறுதலையாகலின், பொருளின்கண் கிடக்கும் பண்பு எனப்படாது; அன்மையும் உண்மையும் பண்பிற்கும் ஒத்தலின் பண்பு எனப்படா; என்னை? குணத்திற்குக் குணம் இன்மையின்” (சொல்-214). பூர்வ மீமாம்சை (வாக்கிய பேதம், நியமவிதி) “இவ்வாறு ஒரு பொருள் நுதலிற்றாக உரையாக்கால் சூத்திரம் என்றாமாறு இல்லை” சொல்-1); “இரு தொடர்ப்படச் சூத்திரத்து” (சொல்-67); “இரண்டு வேற்றுமையும் எய்துவதனை நியமித்தவாறு” (87); “ஏனையிடத்து வாராது என்று நியமித்தற்கு என்பது” (260). வியாகரணம் வடநூலாரும் பிரியாத் தொகையும் பிறசொல்லான் விரிக்கப்படும் என்றார் (416); இவற்றை வடநூலார் தாது என்பர் (415); இயற்பெயராவன சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தம் இன்றிப் பொருளே பற்றி வரும் (174); இயைபின்மை நீக்கலும், பிறிதின் இயைபு நீக்கலும் என விசேடித்தல் இருவகைத்து (182). வடமொழிப் புலமையும் பற்றும் மிகுதியாகச் சேனாவரையருக்கு இருந்த காரணத்தால் தமிழ் மொழியின் இயல்புக்கும் இலக்கணத்திற்கும் ஒவ்வாத கருத்துகள் சிலவற்றையும் கூறியுள்ளார். அவற்றை மனத்தில் கொண்டு ஆராய்ச்சி அறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் சேனாவரையரைப்பற்றி, “வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். இவ்விரு பெரிய மொழிகளும் இருவேறு தனிமொழிகள் என்பதை மறந்த வடநூல் முடிபுகளையும் கொள்கைகளையும் தமிழுக்குரிய இலக்கணங்களில் புகுத்தி அவற்றிற்கு அமைதி கூறுவர்” என்று கூறுகின்றார்.1 சேனாவரையர், தொல்காப்பியரைப் பற்றிக் கூறும்போது வடநூலொடு மாறுகொள்ளாமல், நூல் இயற்றியவர் (74, 114) என்று கூறுகின்றார். மேலும் “தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் 1. தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம்-36. |