எழுந்தது. அதனால் அந்த எருமையை எடுத்து அடக்கம் செய்பவர் யார் என்ற வினா எழுந்தது. அவ்வூர்க் கணக்கன், தனக்குப் பகையாய் இருந்த குயவரைப் பழிவாங்க எண்ணி, “ஊர்க் குயவர், பசுமட்கலங்கைளச் சுடும் பொருட்டு அமைத்த சுள்ளையில் எழுந்த புகையாகிய மேகத்தால் மழை மிகுதியாகப் பெய்து, வெள்ளம் வந்தது. அவ் வெள்ளத்தில் மூழ்கி எருமை செத்தது. எனவே ஆற்றுள் செத்த எருமையை எடுத்து அடக்கம் செய்தல், ஊர்க்குயவர்களின் கடமையாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு என்னிடம் உள்ள பழைய சுவடி சான்றாய் உள்ளது” என்றான். வேடிக்கையான இக் கதையினைச் சேனாவரையர் மிகச் சுருக்கமாக, ‘ஆற்றுள் செத்த எருமை ஈர்த்தல், ஊர்க்குயவர்க்குக் கடன் என்பது முதலாயின’ என்று குறிப்பிடுகின்றார்.* இவையாவும் சேனாவரையர் இலக்கணப் புலமையுடன், மக்கள் பேசும் பேச்சினையும் நுணுகி அறிந்தவர் என்பதை விளக்கும். காலத்தின் அடிச்சுவடு சேனாவரையர் காலத்து மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு ஆகியவை அவர் உரையில் இடம் பெற்றுள்ளன. கால வெள்ளம், கரையில் ஒதுக்கிய பொன்மணல்களாய் மின்னி அவை, காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. சேனாவரையர் காலத்தில், பாம்புக் கடியினால் உடம்பில் ஏறிய நஞ்சினைப் போக்க ஒருவகையான கருங்கல்லும் பயறும் பயன்பட்டன. அவ்விரு பொருள்களும் ஒரு சேர அக்காலக் கடைகளில் விற்கப்பட்டன. இச் செய்தியினைச் சேனாவரையர், “பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பான் ஒருவனுழைச் சென்று” என்று குறிப்பிடுகின்றார் (35). இக் காலத்தைப் போலவே அக் காலத்திலும் வீட்டின் தரையைக் கல்லும் செங்கல்லும் கலந்து போட்டு இடித்து வலிமையாக்கினர் என்பதை, “கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்று எனின் அது செயற்கைப் பொருளேயாம்” என்று அவர் கூறுவதால் அறியலாம் (19). நிலத்தை விற்கும்போதும் வாங்கும்போதும் பதிவேடுகளில் அக் காலத்தில் குறித்து வைக்கப்பட்டன என்பதை “நிலத்தது * விநோதரமஞ்சரியில் இக் கதை சிறிது வேறுபாட்டுடன் கூறப்பட்டுள்ளது. பார்க்க பிற்சேர்க்கை-1. |