சிவஞான முனிவர் அப் பொதுப்பாயிரம் முழுவதையும் தந்து தம் உரையைத் தொடங்குகின்றார். 33 அடிகளால் அமைந்த அப்பாயிரம் அகவற்பாவால் அமைந்து, ஆசிரியர், மாணவர் ஆகியவர்களின் தகுதிகளைக் குறிப்பிடுகின்றது * 3. மயேச்சுரர் என்னும் போரசிரியர் யாப்பருங்கல விருத்தியுரையில், யாப்பு நூல் ஒன்று இயற்றிய மயேச்சுரர், பேராசிரியர் என்று குறிப்பிடப்படுகின்றார். ‘பிறை முடிக் கறை மிடற்றனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், திரிபுரம் எரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், காமனைக் காய்ந்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என்று பலவாறு ‘மயேச்சுரர்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் செய்யுளில் உரையால் தெரியக் கிடக்கும் பேராசிரியர் கொள்கையில் சிலவற்றோடு, இவ்விருத்தியுரையிற் கண்ட பேராசிரியர் மயேச்சுரர் சூத்திரங்கள் மாறுபடுகின்றன. அது கொண்டு ஈண்டு சுட்டப்பட்டவர். தொல்காப்பியத்திற்கு உரை இயற்றிய பேராசிரியர் அல்லர் என்று துணியப்படும். 4. குறுந்தொகை உரை எழுதிய பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை எழுதிய பேராசிரியர் ஒருவர் உண்டு. நச்சினார்க்கினியரின் உரைச் சிறப்புப் பாயிரம், நல்லறி வுடைய தொல்பே ராசான் கல்வியும் காட்சியும் காசினி அறிய பொருள்தெரி குறுந்தொகை என்று கூறுகின்றது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் எழுதிய உரை மறைந்து விட்டது. பொருளதிகாரத்திற்கு உரை இயற்றிய பேராசிரியரே குறுந்தொகைக்கும் உரை இயற்றினார் என்பதற்குக் தக்க சான்றுகள் இல்லை. நச்சினார்க்கினியர் அகத்திணை இயலில் (46), “யானே ஈண்டையேனே” என்னும் (குறுந்தொகை 54) பாட்டில் ‘மீன் எறி தூண்டில்’ என்றதனை ஏனையுவமம் என்றார்” என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் குறிப்பிடுவது, பேராசிரியர் பொருளதிகாரத்திற்கு எழுதிய உரையையாகும்.1 * உரையுடன் சதாசிவப் பண்டாரத்தார் பதிப்பு - 1928. 1. குறுந்தொகைச் சொற்பொழிவுகள் (1940) பக்.14, 15. |