பக்கம் எண் :

உரையாசிரியர்கள்224

    மொழிபெயர்ப்பு - பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளைத் தமிழ்
நூலாகச் செய்வது (மர-97).

     வனப்பு-பெரும்பான்மையும் பல உறுப்புத் திரண்ட வழிப் பெறுவதோர்
அழகு (செய்-235).

     அரற்று-அழுகையன்றிப் பலவும் சொல்லித் தன்குறை கூறுதல்; அது
காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல வழக்கினுள்ளோர்
கூறுவன (மெய்-12).

     களவு-வாய்வெருவுதல், அதனானும் அவன் உள்ளத்து நிகழ்கின்றது
ஒன்று உண்டு என்று அறியப்படும் (மெய்-12).

     தத்தை-பெருங்கிளி; கிளி-சிறுகிளி (மர-98).

     கொலை-அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்று உரைத்தல்
(மெய்-10).

     கொச்சகம்: ஒப்பினாகிய பெயர்; ஓர் ஆடையுள் ஒரு வழி
அடுக்கியது கொச்சகம் எனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுள் பல குறள்
அடுக்கப்படுவது கொச்சகம் எனப்பட்டது (செய்-121). இக் காலத்தார் அதனைப்
பெண்டிர்க்கு உரிய உடை உறுப்பாக்கியும் கொய்சகம் என்று ஆக்கலின்
என்பது (152).

தொல்காப்பியரை மதித்தல்

    பேராசிரியர், தொல்காப்பியரிடத்துப் பெரிதும் மதிப்புடையவர். அவரைத்
தெய்வப் புலவராய்-வினையின் நீங்கி விளங்கிய அறிவராய்ப் போற்றுகின்றார்;
தொல்காப்பியத்தில் குற்றம் குறை எதுவும் இருக்க முடியாது என்று மிக
உறுதியாய் நம்புகின்றார். இதற்கு டாக்டர் இராம. பெரிய கருப்பன்
(தமிழண்ணல்) பின் வரும் தகுந்த சான்றுகள் இரண்டினைக் காட்டுகின்றார்:*

     1. செவிலி கூற்றமைந்த பாடல்கள் காணப்பட்டில எனினும் நம்பிக்கை
காரணமாக இவர் (பேராசிரியர்) “இலக்கணம் உண்மையின் அவையும் உள
என்பது கருத்து” என்பார் (உவ-31).

     2. தொல்காப்பியர் நண்டினை நான்கறிவுடைய உயிராக நூற்பா
செய்துள்ளமையின், அதனைக்கண்ட பேராசிரியர், ‘இதற்கு (நண்டிற்கு) மூக்கு
என்ற பொறி இலதே.” எனச் சற்றுத் திகைக்கின்றார். இங்கு ‘வண்டு’ என்றே
பாடம் இருந்திருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் சி. கணேசையர்
அவர்கள் சான்றுடன் குறிப்பிடுவது பெரிதும் பொருத்தமாகும். ஆனால்


 

 * சென்னைப் பல்கலைக் கழக உரையாசிரியர்கள் கருத்தரங்குச்
சொற்பொழிவு.