பக்கம் எண் :

உரையாசிரியர்கள்230

வடமொழிப் புலமை

    இவர் வடமொழிப் புலமை உடையவர். வடமொழி இலக்கணக் கருத்தை
நினைவூட்டிப் பல இடங்களில் எழுதுகின்றார்.

    “வட மொழிக்கண் எழுவாயாகிய பெயர் ஈறுகெட்டு உருபேற்கும்.
அவ்வாறன்றித் தமிழ்மொழிக்கண் ஈறு திரியாது எழுவாயாகிய பெயரின்
மேலே உருபு நிற்கும்” (67) என்று கூறுகின்றார்.

    பாணினியாரின் இலக்கணக் கொள்கையை இரண்டு இடத்தில்
சுட்டுகின்றார்:

     ‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே’ (88) என்ற சூத்திரத்திற்கு
வேறுபட்ட உரையை எழுதி, ‘இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும்’ என்று
உரைக்கின்றார்.

     ‘வண்ணத்தின் வடிவின்’ என்ற சூத்திரத்தின் உரையில் (411)
“வேற்றுமைத் தொகை....என்பன தம்முள் ஒருபுடை ஒப்புமை உடைய
ஆதலின், பாணினியார் தற்புருட சமாசம் என்று குறியிட்டார்” என்று
கூறுகின்றார்.

     சில தமிழ்ச் சொற்களுக்கு அவற்றோடொத்த வடசொற்களைக்
கூறுகின்றார்:

          தமிழ்                  வடமொழி

         முதல்                    காரகம்(69)
          உரிச்சொல்                தாது
          இசை                     முக்கியம்
          குறிப்பு                    இலக்கணை
          பண்பு                     கௌணம் (293)
          இவறல்                    லோபம் (392)
          அடை                     விசேடணம் (408)

உரைநடை இயல்பு

    தெய்வச்சிலையார் உரைநடை உயிரோட்ட முடையதாய், எளியதாய்
உள்ளது. கீழே இவரது உரையின் ஒரு பகுதி தரப்படுகின்றது:

     “காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர்
பொருள். உலகம் என்பது மேலும், கீழும் நடுவும் ஆகி, எல்லா உயிருக்கும்
தோன்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது
மனம் புத்தி ஆங்காரமும் பூததன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டப்பட்டு
எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை
மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும்
அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்