பக்கம் எண் :

உரையாசிரியர்கள்250

வென்ற நெடுஞ்செழியன் மண்ணாசையாற் சென்று பொருதலின் இப்போர்
வஞ்சியாகலின், வஞ்சிக்குத் கொற்றவை நிலை உண்மையின் கொற்றவையை
வெற்றிப் பொருட்டுப் பரவுதல் கூறினார், அது பாலைத் திணைக்கு ஏற்றலின்”
என்று கூறுகின்றார்.

     இக் கருத்துக்களை நோக்கும்போது இவர், நெடுநல் வாடை இன்ன
திணைக்கு உரிய பாடல் என்று அறுதியிட்டுக் கூற எத்துணையோ நாட்கள்
ஆராய்ச்சி செய்துள்ளார்; அத்தகைய நெடிய ஆராய்ச்சி செய்தும் வெற்றி
காணமுடியாது குழப்பம் எய்தி இருக்கின்றார்; அக் குழப்பம் காரணமாகத்
திணையில் துணிவு பிறவாது வாகைத்திணை என்றும் பாலைத் திணை
என்றும் கூறியதோடு கூதிர்ப்பாசறை என்றும் கொற்றவை நிலை என்றும்
துறையிலும் துணிவு பிறவாது கூறிச் சென்றுள்ளார் என்று தெளியலாம்.*

பாரதக் கதையில்-முரண்பாடு

    கலித்தொகையில் (101), முல்லைக்கலிப் பாடல் ஒன்றில்,

          ஆரிருள் என்னான் அருங்கங்குல் வந்துதன்
         தாளிற் கடந்தட்டு, தந்தையைக் கொன்றானைத்
         தோளின் திருகுவான் போன்ம்

என்ற பகுதிக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை எழுதுகின்றார்:

     “வருதற்கரிய கங்குலிலே அரிய இருள் என்று கருதானாய் வந்து,
துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலே வென்று
கொன்று தன் தோளால், தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப் போலும்.”

     இங்கே நச்சினார்க்கினியர் துரோணாசாரியனைக் கொன்றவள் சிகண்டி
என்று கூறுகின்றார். இக் கூற்று, பாரதக் கதையுடன் மாறுபாடாய் உள்ளது.
துரோணரைக் கொன்றவன் திட்டத் துய்மன்; வீடுமனைக் கொன்றவள் சிகண்டி
என்று பாரதக் கதை கூறுகின்றது (வில்லி-பதினெட்டாம் 213-215).

     நச்சினார்க்கினியர் உரையில் இத்தகைய மாறுபாடு ஏற்படக் காரணம்
என்ன என்பது புலப்படவில்லை.

ஆராய்ச்சித் திறன்

    குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான பூக்களைக் குறிப்பிடுகின்றார்.
(61-97). அப் பூக்களை எல்லாம் குறிஞ்சி நிலத்


 * புனையா ஓவியம் - பக்கம். 19. செ. வேங்கடராமச் செட்டியார்.