பக்கம் எண் :

உரையாசிரியர்கள்256

என்ற சூத்திர உரையின் கீழ், “மிகுதலாவது, குலம் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே அந்தணர் அரசர் முதலிய வருணத்துப்
பெண் கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோர் அம்முறை உயர்தலும்
கொள்க” என்று விளக்கம் எழுதியுள்ளார்.

     பொருளியலுள்,

          பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

(பொரு-30)

என்ற சூத்திரத்தின் உரைக்கீழ், ‘அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும்,
வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் ஊடற்கு உரியர்’ என்று எழுதியுள்ளார்.

     கற்பியலில், (6) “அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும்
வணிகர்க்கு இருவரும் தலைவியர் ஆகிய வழித் தம் குலத்திற் கொண்டவரே
வேள்விக்கு உரியர்; ஏனையோர் வேள்விக்கு உரியர் அல்லர்” என்று
எழுதியுள்ளார்.

     இவை நச்சினார்க்கினியரின் நால்வருணப் பற்றையும், குல முறையால்
வரும் ஏற்றத்தாழ்வுக் கொள்கையையும் நன்கு வெளிப்படுத்தும்.

     பாட்டிற்குரிய தலைமகளுக்கு நால்வருணம் கூறிய இவரே, பாடல்களில்
கூறப்படாத பிரமசரியம், கிரகஸ்தம், வானப் பிரத்தம், சன்னியாசம் ஆகிய
நால்வகை நிலைகளையும் அகத்திணைத் தலைமக்கள் வாழ்வில்
புகுத்தியுள்ளார்.

     கலித்தொகையில், ‘செல்வம் என்றது துறவறத்திற் சேறற்குக் கற்ற
கல்வியை; அது வானப்பிரத்தம் (15)’ என்றும், ‘இல்லறம் நிகழ்த்தி
வானப்பிரத்தம் நிகழ்த்துங்கால் உடனுறைதலின் உடனுறை வாழ்க்கை
என்றான் (94). என்றும் கூறியுள்ளார். பாட்டில் இல்லாத செய்தியை இவர்
கூறித் தம் கருத்தைத் திணிக்கின்றார்.

          பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
         ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(கற்-4)

என்ற சூத்திரத்திற்குப் பொருந்தாவுரை எழுதுகின்றார். ‘இருடிகள், மேலோர்
கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக்காட்டினார்’ என்று எழுதி, தமிழ்
பண்பாட்டிற்கு மாசு தேடுகின்றார்.

     கற்பு என்பதை விளக்கும்போது, ‘இவளை இன்னவாறு பாதுகாப்பாய்
எனவும், இவற்கு இன்னாறே நீ குற்றேவல் செய்து ஒழுகுக எனவும்
அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர