தமக்குத் தோன்றியதை வெளிப்படையாக எழுதியிருப்பது போற்றத்தக்கது. உரை வளர்ந்த வகை முதலிய பொதுவான இயல்புகளையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தொகுத்துச் சொல்லியிருக்கிறார். பல நூல்களையும் உரைகளையும் ஆராய்ந்து, மற்றவர்களுடைய கருத்தையும் தெளிந்து, நல்ல முறையில் வகைப்படுத்தி, ஆசிரியர் இந்த நூலை எழுதியிருப்பது பாராட்டத் தக்கது. இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் தமிழ் வரலாற்றின் கூறாக நின்று மாணாக்கர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக்க பயனைத்தரும். இவ்வாசிரியர் இன்னும் பலபல ஆராய்ச்சி நூல்கள் எழுதிப் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் |