சிறப்பையும், நச்சினார்க்கினியர் புலமை மாண்பையும் பின் வருமாறு புகழ்ந்துள்ளார்: “ஐரோப்பிய இலக்கியத் திறனாய்வாளர்களின் விளக்கத்தைப் போல, இவர் உரைப்போக்கு அமைந்துள்ளது. செய்யுளின் பொருளை விளக்கி இலக்கணத்தின் தனித் தன்மைகளைக் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியச் சூத்திரங்களைத் தம் உரை முழுதும் மேற்கோள் காட்டுகின்றார். சிறப்பான சொற்றொடர்களை விளக்குகின்றார். தம் காலத்தில் வழங்கி வந்த பல பாட வேறுபாடுகளைத் தருகின்றார். இவரது உரைநடை செறிவான போக்கில் உயர்வான மொழியில் அமைந்தள்ளது. பாகுபாடு செய்யும் பேராற்றலை இவரது படைப்பில் காணலாம்.”* | இலக்கிய நோக்கு : நச்சினார்க்கினியர், சிந்தாமணியைச் சிறந்த இலக்கியமாகக் கருதிப் போற்றியுள்ளார். நூலின் தொடக்கத்தில்-முதற்பாட்டு உரையில், “யாமும் இவ்விலக்கியம் இனிது முடிதற் பொருட்டு அவன் திருவடிகளை வணங்குவோம் என்றார் என்க” என்றும், நூலின் இறுதியில் (3142), “இவ்விலக்கியம் இடுக்கண் இன்றி இனிது முடிந்த மகிழ்ச்சியான், மீண்டும் வணங்குகின்றார்” என்றும் கூறியுள்ளார். சிந்தாமணியை ஆழ்ந்து கற்று, கலையழகில் ஈடுபட்டு, இலக்கியச் சுவையில் தம்மை மறந்து ஈடுபட்டவர் நச்சினார்க்கினியர். ஆதலி்ன் சொற்களுக்குப் பொருத்தமான பொருளை உரைக்கின்றார்; பாட்டில் அமைந்திருக்கும் நுண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றார்; உவமைகளின் பொருத்தத்தை விளக்குகின்றார்; இலக்கிய மரபுகளைப் பேணிக் காக்கின்றார்; உலகியலை உணர்த்தி நயவுரை எழுதுகின்றார். சொற் பொருள்; சிந்தாமணியில் உள்ள சொற்களும் சொற்றொடர்களும் நச்சினார்க்கினியர் விளக்கத்தால் சிறந்த பொருளை உணர்த்துகின்றன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன; உயர்மிக்க தந்தை (473)-பிள்ளை உயர்ச்சி மிகுதற்குக் காரணமான தந்தை. *His comments are very much on the plan of European annototions. He paraphrases the text and points out grammatical peculiaritles. He quotes Tholkappia Sutrams through out. explains Obsolute terms and gives the various readings which existed in his day; but his style is condensed and his language pedantic. His productions. however show great powers of analysis, - Rev. Dr. BOWER, History of Tamil literature - Page 256. M.S. Purnalingam Pillai. |