(எ-டு) 1. | சாத்தன், உண்டான், மன், நனி என்பன தனி மொழி. | 2. | சாத்தன் வந்தான் - இது பயனிலைத் தொடர். யானைக்கோடு - இது தொகை நிலைத் தொடர். நிலம் நீர் - இஃது எண்ணு நிலைத் தொடர். | இவை இருமொழித் தொடர் | 3. | அறம் வேண்டி அரசன் உலகம் புரக்கும் என்பன பன்மொழித் தொடர். | இலக்கியநெஞ்சம் நச்சினார்க்கினியர் உள்ளத்தில், இலக்கணத்திற்கு உரை எழுதும்போது இலக்கிய நினைவும், இலக்கியத்திற்கு உரை எழுதும் போது இலக்கணச் சிந்தனையும் எழுகின்றன. தொல்காப்பிய உரையை இவர் இலக்கியக் களஞ்சியம் ஆக்கியுள்ளார். எழில் மிகுந்த சொற்றொடர், உள்ளங்கவரும் உவமை, இனிய ஓசை கெழுமிய வாக்கியம், என்றும் நெஞ்சத்தில் நின்று நிலவும் எடுத்துக் காட்டு, இலக்கியச் சுவை முதிர்ந்த கவிதை மேற்கோள் - ஆகியவற்றை இவர் உரையில் காணலாம். இவர் இலக்கியப் பூங்காவில் நுழைந்து தமிழ்த் தேன் திரட்டி வந்து தொகுத்துத் தருகின்றார். பாயிர உரையில் உள்ள ‘ சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினோர்’ என்ற இனிய தொடர், உள்ளத்தைக் கவர்கின்றது. பின் வரும் பகுதியில் கவிதைச் சுவை ததும்பி வழிகின்றது. ‘பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய் இருத்தலின், அது கேளாக்கால் குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சி புக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப்படும் என்க’. மூலத்தில் உவமை இல்லை எனினும், விளக்கத்திற்காக, இவரே உவமையைப் படைத்து எழுதுவதுண்டு. ‘வளியிசை அண்ணம் கண்ணுற்று அடைய’ (எழுத்-99) என்பதை, - ஓசை அண்ணத்தை அணைந்து உரலாணி இட்டாற் போலச் செறிய’ என்று ஓர் உவமையைக் கூறி விளக்குகின்றார். வினைத்தொகைக்கு இவர் தரும் உதாரணமும் விளக்கமும் இவரது கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. “கொல்யானை என்பது, அக்காலத்து அஃது உதிரக் கோட்டோடு வந்ததேல் இறப்பும்; அதன் தொழிலைக் கண்டு |