செய்வுறு மண்டிலம் மையாப் பதுபோல் மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே; நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டி, புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே இவட்கே, சுனைமாண் நீலம் கார்எதிர் பவைபோல் இனைநோக்கு உண்கண் ணீர்நில் லாவே இவ்வாறே கற்பியலில் ‘துன்புறு பொழுதினும்’ (43) என்னும் நூற்பா விளக்கவுரையில் பாலைக்கலிப்பாடலின் (கலி-4) சில அடிகளைத் (9-14) தந்துள்ளார். அகத்திணை இயலில் (44) ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ என்னும் நூற்பாவை விளக்கும்போது, ‘அரும் பொருள் வேட்கையின்’ என்னும் பாலைக்கலிப்பாடலை (கலி-18)க்காட்டி அதில், ‘நாளது சின்மையும்’ (அகத்திணை-41) முதலிய இலக்கணக் கருத்துக்களைப் பொருத்திக் காட்டுகின்றார். அகத்திணையியல் (37) ‘ஏமப்பேரூர்’ என்பதற்குப் ‘பதியெழு வறியாப் பேரூர்’ என்று விளக்கும் இடத்தில் இளங்கோ அடிகளில் குரல் எதிரொலிக்கின்றது. முற்போக்குச் சிந்தனை நச்சினார்க்கினியரிடம் சிறந்த முற்போக்குச் சிந்தனை உள்ளது. புதுமையை நாடும் திறனாய்வாளர்கள் இவரது முற்போக்குச் சிந்தனையை நயந்து போற்றுவர். அத்தகைய இடங்களில் சிலவற்றைக் காண்போம்: இளங்கோவடிகள், மங்கல வாழ்த்துப் பாடலின் தொடக்கத்தில், திங்கள் ஞாயிறு மாமழை பூம்புகார் ஆகியவற்றைப் போற்றுவது குறித்துப் பலவகையான புதுவிளக்கங்களைத் திறனாய்வாளர்கள் கூறி வருகின்றனர். நச்சினார்க்கினியர் ஒரு கருத்தைத் கூறி நம் சிந்தனையைத் தூண்டுகின்றார். புறத்திணையியலில் 36-ஆம் நூற்பாவில் வரும், நடைமிகுத்து எத்திய குடைநிழல் மரபும் என்ற அடிக்கு விளக்கம் எழுதும் போது, ‘மரபு என்றதனால் செங்கோலும் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலும் கொள்க’ என்று கூறி, திங்களைப் போற்றுதும் ... அளித்தலான் எனவும், |