பக்கம் எண் :

295ஆய்வு

     கடுப்பு உடை பறவை-குளவி (பெரும்பாண்-229).

     பறி-மீன் வாரி எடுக்கும் பறி (பெரும்பாண்-265).

     நோக்கு-அழகு (மதுரைக்-13).

     விறலியர்-விறல்பட ஆடுதலை உடையார் (மதுரை-218)

     தட்டை-தட்டப்படுதலின் தட்டை என்றார் (மதுரை-305).

     தீம்புளி-கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி (மதுரைக்-318).

     கொழுமீன் குறைஇய துடிகண் துணியல்-கருவாடு (மதுரைக்-320).

     கவ்வை-எள்ளிளங்காய் (மதுரைக்-271).

     தொய்யில்-எழுதும் குழம்பு (மதுரை-416).

     நாளொடு பெயரிய விழுமரம்-உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற
உத்தரக் கற்கவி (நெடுநல்-82).

     ஒருத்தல்-யானைத் தலைவன் (மலைபடு-299).

     அரி-அரிசி (மலைபடு-416).

     முடுவல்-பெண் நாய் (மலைபடு-566).

     பனிக்கும் பாசறை-நோய் தீரும் மருந்துபோல் நின்றது (முல்லை-79).

உவமை விளக்கம்

    பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பல உவமைகள், நச்சினார்க்கினியர்
விளக்கத்தால் நன்கு விளங்குகின்றன. இவர் உரைஇன்றேல், பல உவமைகள்
விளங்காமல் போய் இருக்கும்.

 திருமுருகாற்றுப் படையில் (1-3),

          உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
         பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
         ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி

என்ற இனிய உவமை முருகனின் தோற்றத்தை நம் கண்முன் கொண்டு
வந்து நிறுத்துகிறது. இவ்வுமையின் சிறப்பை நச்சினார்க்கினியர் நன்கு
விளக்குகின்றார்:

     ‘ஞாயிறு இருளைக் கெடுக்குமாறு போல, தன்னை மனத்தால்
நோக்குவோர்க்கு மாயையைக் கெடுத்தலின் தொழில் உவமும்;
தன்னைக்கட்புலனால் நோக்குவோர்க்குக் கடலின் பசுமையும் ஞாயிற்றின்
செம்மையும்போல மயிலின் பசுமையும் திருமேனிச் செம்மையும் தோன்றலின்
வண்ண உவமமும்