பக்கம் எண் :

297ஆய்வு

என்ற அடிகளுக்குப் பொருள் எழுதியபின்’ ‘மதியும் மீனும் பொய்கைக்கும்
கரைக்கும் உவமிக்கும் பொருள். இனி, உயர் கோட்டத்தை, எல்லாரும்
மதியைச்சேர்ந்த மக வெண்மீனைப் பார்க்கைக்கு இடமாகிய கோயிலாக்கி,
கோயிலும் பொய்கையும் என எண்ணுதலாம். இனி, பொய்கைக் கரையிலே
கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் மதி சேர்ந்த வெண்மீன் போன்ற
என்றுமாம்’ என வேறு சில கருத்துகளையும் கூறுகின்றார்.

     மலைபடுகடாத்துள்,

        தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
       சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி          (227, 228)

என்ற இரண்டு அடிகளுக்கும் பொருள் எழுதியபின் மூன்று வேறு
விளக்கங்களை, உவமையையும் பொருளையும் தொடர்பு படுத்தி எழுதுகின்றார்.

     பெரும்பாணாற்றுப்படையில்,

       குழுவித் திங்கள் கோள்நேர்ந் தாங்கு            (384)

என்ற உவமையை இல்பொருள் உவமை என்று நச்சினார்க்கினியர்
கூறுகின்றார். பௌர்ணமியன்றுதான் சந்திர கிரணம் ஏற்படும். ஆதலின்,
‘பிறைமதியைப் பாம்பு தீண்டினாற்போல’ என்ற உவமையை இல்பொருள்
உவமை என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்துப்பாட்டில்-வெண்பாக்கள்

    பத்துப்பாட்டில் ஒவ்வொரு பாட்டின்கீழும் வெண்பாக்கள் சில
இடம்பெற்றுள்ளன. அவற்றின் எண்ணிக்கை மொத்தம் 24. அவற்றுள்
முல்லைப்பாட்டின் கீழே உள்ள இரண்டு வெண்பாக்களில் ‘புனையும்
பொலம்படை’ என்ற வெண்பா புறப்பொருள் வெண்பா மாலையில்
உள்ளதாகும் (கார்முல்லை-276). நெடுநல் வாடையின் கீழே உள்ள
‘வாடைநலிய’ என்ற வெண்பாவும் புறப்பொருள் வெண்பா மாலைக்குரியதே
(வாடைப்பாசறை 170). பட்டினப்பாலையின் கீழேஉள்ள ‘முச்சக்கரமும்’ என்ற
வெண்பா பொருநராற்றுப் படையின்கீழும் எழுதப்பட்டுள்ளது.

     ஏனைய வெண்பாக்களில் சிலவற்றை உரையாசிரியர்கள்
மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.

     நச்சினார்க்கினியரும் சிலவற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
பொருநராற்றுப்படையின் கீழுள்ள ‘ஏரியும்’ என்ற வெண்பாவைப்
புறத்திணையியலிலும் (31), ‘முச்சக்கரமும்’ என்ற வெண்பாவை,
பொருநராற்றுப்படை உரையிலும் (148 அடிக்கு மேற்கோள்), மலைபடுகடாம்
பாடலின் கீழுள்ள ‘தூஉஉத்