பக்கம் எண் :

உரையாசிரியர்கள்318

காட்சியின் பயன் கொள்வார் பலரும் புகழும் ஞாயிற்றைக் கடலிடத்தே
கண்டாற் போல.

    பரிமே: உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு * ஆதலாலும்
உயர்ந்தோராகிய பரம இருடிகளாய் உள்ளோர் விரும்ப, வலமாகத்
திரிந்தருளுகின்ற எல்லாச் சமயத்தாராலும் கொண்டாடப்பட்ட ஆதித்தனைக்
கடலிற் கண்டாற் போல.

     கவி: உயர்ந்தோர் விரும்பும்படி எழுந்து மேருவை வலமாகவருகின்ற
பலராலும் புகழப்பட்ட ஆதித்தன் கடலிடத்தே கண்டால் ஒத்த.

     பரிதி: உலகின்கண் உள்ள எண்பத்து நான்கு இலட்சம்
சிவபேதங்களாகிய உயிர்த்தொகுதிகள், பலர் - எல்லாச் சமயத்தாரும்,
ஞாயிறு - இளைய சூரியன். கண்டாஅங்கு - உதயமானது போல.

     சைவசமயச் சான்றோர் பலர், திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதி
அந்த நூலைப்பரப்புவதைச் சிறந்த சமயத் தொண்டாகக் கருதிப் பணி
செய்துள்ளனர். திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயரும் ஆறுமுக
நாவலரும் எழுதிய பதவுரை பல பதிப்புகள் வந்துள்ளன. வை. மு.
கோபாலகிருஷ்ணமாச்சாரியார், சு. அருள் அம்பலனார், எஸ்.
வையாபுரிப்பிள்ளை, இரா. இராதாகிருஷ்ணன், எம். ஆறுமுகம் பிள்ளை,
புலியூர்க் கேசிகன் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

     சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (திருநெல்வேலி), வெள்ளி விழா
மலராக (1960) விளக்கவுரையை வெளியிட்டுள்ளது.

     திறனாய்வு நூல்கள் சில வெளி வந்துள்ளன. தமிழறிஞர்கள்
கி.வா.ஜகந்நாதன் (வழிகாட்டி, திருமுருகாற்றுப் படை விளக்கம்),
டாக்டர் மொ. அ. துரையரங்கனார் (அன்பு நெறியே தமிழர் சமயம்),
செ. வேங்கடராமச் செட்டியார் (பெறலரும் பரிசில்) கோதண்டபாணி
பிள்ளை (திருமுருகாற்றுப்படைத் திறன்) ஆகியோர் இயற்றியவை சிறந்து
விளங்குகின்றன. சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், அடிக்கு அடி
நுண்பொருள் கண்டு, பாடலின் அமைப்பை வியந்து, இயற்கைக் காட்சிகளில்
மூழ்கி உவமைகளில் திளைத்து இவர்கள் நக்கீரர் புலமை மாண்பைக்
கொண்டாடுகின்றனர். சமயக்-கருத்துக்களையும் குறிப்புப் பொருளையும்
வெளிப்படுத்துகின்றனர்.

     தமிழ்ச்தென்றல் திரு.வி.க. முருகன் அல்லது அழகு என்னும் நூலில்,


 * பிங்கலந்தை நிகண்டு.