பக்கம் எண் :

327ஆய்வு

     அன்பு - தன்னால் புரக்கப்படுவார் மேலுளதாகிய காதல் (5).

     அல்லிப்பாவை ஆடுவனப்பு - ஆண்கோலமும் பெண்கோலமுமாய
அவ்விருவரும் ஆடு்ம் கூத்தை (33).

     கராம் - முதலையுள் ஒரு சாதி (37).

     வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும். மென்புலம் - மருதமும் நெய்தலும்
(42).

     கணிச்சி - குந்தாலி, மழு (42).

     கலி - புகழும் அரவம் (52).

     கோளி - பூவாது காய்க்கும் மரம் (58).

     செம்மீன் - திருவாதிரை (60).

     தளம்பு - சேறுகுத்தி (61).

     அனந்தல்பறை - பறைகொட்டுவார் கை, புண்படுதலின் மந்தமாக
ஒலித்தல் (62).

     எருவை - தலைவெளுத்து, உடல் சிவந்திருக்கும் பருந்து; கழுகு
எனினும் அமையும் (64).

     ஓரி - தேன் முதிர்ந்தால் பரக்கும் நீலநிறம்; முசுக்கலை எனினும்
அமையும் (109).

     படை மடம் - வீரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும்,
புண்பட்டார் மேலும், இளையார் மேலும் செல்லுதல் (142).

     கைவழி - கையகத்து எப்பொழுதும் இருத்தலான் யாழைக் கைவழி
என்றார், ஆகு பெயரான்.

     இவ்வுரையாசிரியர் பதினெண்கணம் (1), முத்தீ (2), (9), மூவகை முரசம்
(58) ஆகியவற்றைப் பெயர் கூறி விளக்குகின்றார்.

     சில இடங்களில் மிகநயமாக இவர் விளக்கம் கூறுகின்றார். 148ஆம்
பாடலில், ‘எய்யாதாகின்று எம் சிறு ‘செந்நாவே’ என்ற அடியை
விளக்கும்போது, பொய் கூறாமையின் செந்நா’ என்ற அடியை விளக்கும்போது,
“பொய் கூறாமையின் செந்நா’ என்றார்; தற்புகழ்ந்தார் ஆகாமல் சிறு செந்தா
என்றார்” என்று நயமாக உரைக்கின்றார். 219ஆம் பாடலில், “முழு வள்ளூரம்
உணக்கும் மள்ள” என்பதற்கு, “அரசு துறந்து வடக்கிருந்த உயிர் நீத்த
உள்ள மிகுதியால் மள்ள என்றார்” என்று நயங் காண்கின்றார்.

     பிட்டங் கொற்றனை வாழ்த்தவந்த வடம வண்ணக்கன் தாமோதரனார்,
“மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே”(172) என்று பகைவரையும்
வாழ்த்துகின்றார். இதற்கு இவ்வுரையாசிரியர், “மாறுகொள் மன்னரும்
வாழியர் என்ற கருத்து, இவன் வென்று திறைகொள்வது அவர் உளராயின்
என்பதாம்,” என்று நயம் உரைக்கின்றார்.