பக்கம் எண் :

உரையாசிரியர்கள்330

     16.   காஞ்சி -   முதுமொழிக் காஞ்சி
     17.   ஏலாதி -   ஏலாதி
     18.   கைந்நிலை - கைந்நிலை

     இவற்றுள் திருக்குறள் நாலடியார் இரண்டும், அறம் பொருள் இன்பம்
ஆகிய மூன்றையும் கூறுகின்றன.

     நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம்,
ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி,
ஏலாதி ஆகிய ஒன்பதும் நீதி நூல்கள்.

     கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை
ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறும் அகப்பொருள்
நூல்கள்.

உரைகள்

    மேலே குறிப்பிட்ட 18 நூல்களில் பெரும்பாலானவற்றிக்குப் பழைய
உரைகள் உள்ளன. திருக்குறளுக்குப் பத்து உரைகள் தோன்றியுள்ளன.
நாலடியாருக்கு மூன்று உரைகள் உள்ளன.

     நீதி நூல்களில் ஏலாதி நீங்கலாக உள்ள எட்டிற்கும் பழைய உரைகள்
முழுமையாய் உள்ளன. ஏலாதியில் சில பகுதிகளுக்கு உரை சிதைந்து விட்டது.

     அகப்பொருள் நூல்களில் ஐந்திணை ஐம்பது, திணைமாலை ஐம்பது
இரண்டிற்கும் பழைய உரைகள் முழுமையாகக் கிடைத்துள்ளன. திணைமாலை
நூற்றைம்பதில், 126 ஆம் பாட்டிற்குமேல் பழைய உரை கிடைக்கவில்லை.
ஐந்திணை எழுபதில், முதல் 24 பாடல்களுக்கே உரை உள்ளது. கைந்நிலை,
நூல் சிதைந்துள்ளது போலவே உரையும் சிதைந்துள்ளது. கார் நாற்பதில் 23
முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குப் பழைய உரை இல்லை.

     புறப்பொருள் நூலாகிய களவழி நாற்பதுக்கு உரை முழுமையாகக்
கிடைத்துள்ளது.

     இந்தப் பழைய உரைகள் யாவும் பொழிப்புரையாக உள்ளன;
பழையமரபு அறிந்து எழுதப்பட்டுள்ளன. சுருக்கமும் தெளிவும் பெற்றுள்ளன;
அருஞ்சொற்பொருளும் இலக்கணக் குறிப்பும் தருகின்றன.

     1883-ஆம் ஆண்டில், ஆசாரக் கோவையைப் பழைய உரையுடன்,
திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர் வெளியிட்டார். சைவ சித்தாந்த
கழகம், பல பழைய உரைகளை வெளியிட்டுள்ளது. கா, நமசிவாய முதலியார்,
திருமணம் செல்வக்