பக்கம் எண் :

333ஆய்வு

    மதுமலர்த் தண்டார்ப் பதுமன் தெரிந்த
    ஐயமில் பொருண்மை அதிகா ரம்தாம்
    மெய்யா நலத்த எண்ணைந்து அவற்றுள்

என்றும், பழையவுரையாசிரியர் முகவுரையில், “இப்படி நாற்பது அதிகாரமும்
பதுமனார் அடைவு செய்த இந்த அறம் பொருள் இன்பம் மூன்றும்
வழுவாமல் நடாத்தி” என்றும் கூறுகின்றார்கள்.

     டாக்டர் உ.வே. சாமிநாதஐயர் ‘நாலடியார்க்கு உரை இயற்றிய
பதுமனால் நாலடியாரில் திருக்குறளிற் போல அதிகாரம் வகுத்தவர்.
குடத்துக்குள் யானையைப் புகுத்துவது போல், பல பாடல்களைச் சில
அதிகாரங்களில் அவர் புகுத்தி இருக்கின்றார்.* என்று கூறுகின்றார்.

     பதுமனாரின் உரைப்பாயிரம் நாலடியாரைப் பின் வருமாறு பகுத்துக்
காட்டுகின்றது.

    அறவியல் இருவகைத் தாம்;அவை தம்முள்
    துறவுஏழ்; இல்லறம் இருமூன்று என்ப;
    பொருளியல் வகைஏழ்; புலப்படக் கிளப்பின்-
    அரசியல் ஏழதி காரம் ஆகும்;
    நட்பியல் நான்கதி காரம்; இன்பம்
    மூன்றே; துன்ப இயல்அதி காரம்
    நான்கே; ஒன்றே பொதுவியல்; பகையியல்
    கூறு அதிகாரம் நான்கே; பன்னெறி
    வகைதான் இருவகை; அவற்றுள் இன்ப
    துன்பத்து அதிகாரம் ஒன்றே - ஏனை
    இன்பம் கூறுஅதி காரம் இரண்டே.

    உரையில் இவை விரித்து அதிகாரங்களின் பெயர்களோடு
விளக்கப்படுகின்றன.

     பதுமனார் உரை முதலில் தோன்றிய உரையாக இருந்தும் மிகவும்
சிறப்பாக அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த இவ்வுரை பல ஆண்களாக
வெளிப்படாமல் இருந்து 1953ஆம் ஆண்டில்தான், தஞ்சை சரசுவதி மகால்
வெளியீடாக (59-a) உரைவளம் என்ற பெயருடன் இருபகுதியாக வெளிவந்தது.
உரை வளத்தில் தருமர் உரையும் பழையவுரையும் இடம் பெற்றுள்ளன.

     பதுமனாருடைய உரை, பொழிப்புரையாக உள்ளது. தேவையான
இடங்களில் பொருள் விளக்கத்திற்காகப் பல சொற்களை வருவித்துக்
கூறுகின்றது. பொழிப்புரையின் கீழ் அருஞ்சொற் பொருளும், மிகக்குறைவாக
இலக்கணக் குறிப்பும்


 * சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (பக்கம் 159, 160)