நாலடியாருக்கு உரை கண்டவர் பெயரும், உரை வெளி வந்த ஆண்டும் கீழே தரப்படுகின்றன: புதுவை நயனப்ப முதலியார் (1812) புதுவை அ. வேதகிரி முதலியார் (1812) திருமயிலை முருகேச முதலியார் (1874) கோமளபுரம் ராசகோபால பிள்ளை (1904) வேதகிரி முதலியார் (1908) களத்தூர் வேதகிரி முதலியார் (1913) வை.மு. சடகோப ராமாநுசாச்சாரியார் (1921) வே. நாராயண ஐயர் (1924). இவர்களுக்குப் பின்னரும் நாலடியாருக்கு உரை காணும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர். |