பக்கம் எண் :

உரையாசிரியர்கள்34

முன்றாம் பதிப்பின்

முன்னுரை

     உரையாசிரியர்களைப் பற்றிய ஆய்வு, நான்கு கூறுகளை
அடிப்படையாகக் கொண்டதாகும். அவை:

     1. மூல நூல், 2. உரை, 3. பதிப்பு, 4. (இம்மூன்று பற்றியும் நிகழ்ந்துள்ள
முன்னைய) ஆய்வு.

என்பன. இவற்றின் விவரங்களைத் தொகுத்துத் தருகின்ற ஆய்வடங்கல்கள்
செம்மையான முறையில் வெளிவந்தால் ஆய்வு சிறக்கும்; முழுமை பெறும்;
செப்பமடையும்.

     ஆய்வடங்கல்கள் கூறும் விவரங்களை அறிவதோடு அவை குறிப்பிடும்
நூல்களைப் பெறவும்; பெற்றுக் கற்றபின் தேவையான கருத்துக்களைத்
திரட்டவும்; திரட்டிய கருத்துகளைக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை
உருவாக்கவும் வாய்ப்பு வேண்டும்; வசதி வேண்டும். அப்போதுதான், ஆய்வு
நூல் சிறப்பாக அமையும்.

     இந்த நோக்கத்துடன், ‘உரையாசிரியர்கள்’ நூலின் மூன்றாம் பதிப்பு,
முன்னையபதிப்பைக் காட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நான்
பெரிதும் முயற்சி செய்தேன்.

     இரண்டாம் பதிப்பில் இருந்த பிழைகளைத் திருத்தினேன். பல
இடங்களில் வாக்கிய அமைப்பை மாற்றினேன். சில உள்தலைப்புகளை
நீக்கிவிட்டு வேறு தலைப்புகள் வைத்தேன். இவ்வாறு செய்தபோது,
ஒவ்வொரு கட்டத்திலும் நூலின் முன்னைய அமைப்பும் கருத்தும் மாறக்
கூடாது என்பதில் கவனம் செலுத்தினேன்.

     எனக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் மூன்றாம் பதிப்பு செப்பம்
அடைந்துள்ளது. எனினும், நான் எழுதி வைத்துள்ள பல புதிய ஆய்வுக்
கட்டுரைகள் நூலில் இடம் பெறவில்லை. விரிவு செய்த பகுதிகளை இதில்
இணைக்க முடியவில்லை. நூல் பெருகிவிடுமோ என்ற தயக்கம், எல்லா
இடங்களும் ஒரே