2. பாடம் கற்பித்துக்கொண்டு ஓரிருவர் புதுப் பொருள் காட்டியுள்ளனர்; இவர் பொறுக்கத் தகார்; மக்கள் கண்டிக்கவும் அரசு தண்டிக்கவும் தகுவர். 3. இலக்கண வறுமையாலும் இலக்கணச் செருக்காலும் எழுந்த உரைவேற்றுமைகளும் உள; இவை பழிக்கத் தகும். 4. முன்னோன் எழுதிய உரைப்பொருளைப் பெரிதும் தழுவக்கூடாது; தாம் ஒரு தனி யுரை எழுதத் துணிந்ததற்குச் சான்றாக எங்ஙனமேனும் பல குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்பே திருக்குறள் உரை பலவற்றின் தோற்றத்துக்குக் காரணம் என்று சுருங்கச் சொல்லலாம்.”1 திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்து வெளியிட்ட டாக்டர் இரா. சாரங்கபாணி உரை வேற்றுமைக்கு உரிய காரணத்தைப் பின்வருமாறு உரைக்கின்றார். “ஏடெதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக் கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும் சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரிகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர்.”2 உரைகள் பல தோன்றியும் எல்லோரும் ஒப்பும் ஓர் உரை இல்லாமை பெரிய குறைபாடே ஆகும். திருவள்ளுவர் கருத்து ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ஒரு குறளுக்கு ஒரு கருத்துத்தான் இருக்கமுடியும். ஆனால் திருவள்ளுவர் அவ்வாறெல்லாம் கருதினாரோ இல்லையோ, அவரது வாக்கு நமக்குப் பல வகையாய்ப் பொருள் கொள்ள இடத்தருகின்றது. வங்கக் கவிஞர் இரவீந்தரநாத தாகூர் கீதாஞ்சலியில், “கவிஞரின் சொற்களிலிருந்து மக்கள் தாம் விரும்பும் பொருளைப் பெற்று மகிழ்கின்றனர்”3 என்று கூறியுள்ள கருத்து இங்கே நினைவுக்கு வருகின்றது. பழைய உரைகளில் இன்று பரிமேலழகர் மணக்குடவர் பரிப்பெருமாள் காலிங்கர் பரிதி ஆகிய ஐவர் உரைகள் உரைக்கொத்திலும் உரை வளத்திலும் இடம் பெற்றுள்ளன. பரிமேலழகர் உரையும் மணக் குடவர் உரையும் பரிப்பெருமாள் உரையும் தனித் 1. எந்தச் சிலம்பு (1964) பக்கம் 40,41. 2. உரைவேற்றுமை - நூன்முகம். 3. From the words of the poet men take what meanings please them. |