பக்கம் எண் :

உரையாசிரியர்கள்346

களையும் ஆண்பாற் கூற்றாகவே கொண்டு அதற்கேற்ப உரையும்
எழுதுகின்றார்.

இடம் மாறியவை

    காலிங்கர் உரையில் காமத்துப்பாலில் தனிப்படர் மிகுதி, நினைந்தவர்
புலம்பல், அவர் வயின் விதும்பல் ஆகிய அதிகாரங்களில் உள்ள 3
குறட்பாக்கள் இந்த மூன்று அதிகாரங்களிலும் இடம் மாறியுள்ளன.
1

     குறட்பாக்கள் அதிகாரம் விட்டு அதிகாரம் மாறிய தோடு,
அதிகாரங்களும் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளன. கப்பலோட்டிய
தமிழர் வ.உ.சி. பதிப்பித்த மணக்குடவர் உரையில் அறத்துப்பாலில்
இத்தகைய மாற்றம் உள்ளது. தமக்குக் கிடைத்த ஒரே ஒரு ஏட்டுச் சுவடியில்
மட்டும் இத்தகைய மாற்றம் இருந்ததாய் அவர் குறிப்பிட்டுள்ளார்.

     மணக்குடவர் உரையில் இல்லற இயலில் பின்வரும் அதிகாரங்கள்
உள்ளன.

     5. இல்வாழ்க்கை           15. பிறனில் விழையாமை
     6. வாழ்க்கைத் துணை நலம்  16. வெகுளாமை
     7. மக்கட்பேறு             17. இன்னா செய்யாமை
     8. அன்புடைமை           18. கொல்லாமை
     9. விருந்தோம்பல்          19. புலான் மறுத்தல்
     10. வாய்மையுடைமை       20. கள்ளாமை
     11. செய்ந்நன்றியறிதல்       21. தீவினையச்சம்
     12. நடுவு நிலைமை         22. ஒப்புரவறிதல்
     13. பொறையுடைமை        23. ஈகையுடைமை
     14. ஒழுக்கமுடைமை        24. புகழுடைமை

     துறவற இயலில் பின்வரும் அதிகாரங்கள் உள்ளன:

     25. அருளுடைமை         32. புறங்கூறாமை
     26. இனியவை கூறல்       33. பயனில சொல்லாமை
     27. அடக்கமுடைமை       34. நிலையாமை
     28. தவமுடைமை          35. துறவுடைமை
     29. கூடாவொழுக்கம்       36. மெய்யுணர்தல்
     30. அழுக்காறாமை        37. அவா வறுத்தல்
     31. வெஃகாமை

     பரிமேலழகர் உரையில் உள்ள இயல்களில் அதிகார அமைப்பு,
பின்வருமாறு உள்ளது.


 

1. பார்க்க : காலிங்கர் உரை.