இல்லற இயல் 5. இல்வாழ்க்கை 15. பிறினில் விழையாமை 6. வாழ்க்கைத் துணை நலம் 16. பொறையுடைமை 7. புதல்வரைப் பெறுதல் 17. அழுக்காறாமை 8. அன்புடைமை 18. வெஃகாமை 9. விருந்தோம்பல் 19. புறங்கூறாமை 10. இனியவை கூறல் 20. பயனில சொல்லாமை 11. செய்ந்நன்றியறிதல் 21. தீவினையச்சம் 12. நடுவு நிலைமை 22. ஒப்புரவறிதல் 13. அடக்க முடைமை 23. ஈகை 14. ஒழுக்க முடைமை 24. புகழ் துறவற இயல் 25. அருளுடைமை 31. வெகுளாமை 26. புலான் மறுத்தல் 32. இன்னா செய்யாமை 27. தவம் 33. கொல்லாமை 28. கூடாவொழுக்கம் 34. நிலையாமை 29. கள்ளாமை 35. துறவு 30. வாய்மை 36. மெய்யுணர்தல் 37. அவா அறுத்தல். இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் 1. பரிமேலழகர் உரையில் உள்ள புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரம், மணக்குடவர் உரையில் ‘மக்கட் பேறு’ என்று உள்ளது. 2. பரிமேலழகர் உரையில் துறவற இயலில் உள்ள வாய்மையுடைமை கொல்லாமை வெகுளாமை புலான் மறுத்தல் இன்னா செய்யாமை கள்ளாமை ஆகிய அதிகாரங்கள் ஆறும் மணக்குடவர் உரையில் இல்லற இயலில் உள்ளன. 3. பரிமேலழகர் உரையில் இல்லற இயலில் உள்ள இனியவை கூறல் வெஃகாமை அடக்க முடைமை புறங்கூறாமை அழுக்காறாமை பயனில சொல்லாமை அதிகாரங்கள் ஆறும் மணக்குடவர் உரையில் துறவற இயலில் உள்ளன. |