உட்பொருள் காணமுயல்வோர் முயற்சி பயனற்றது என்றும் உரைக்கின்றார். கண்ணும் முகமும் கருங்குழலும் செவ்வாயும் வண்ண முலையும் வனப்புடைத்தென்று - எண்ணிக் கருத்தறியார் சாரலுறும் காளையர்நேர் முப்பால் கருத்தறியாது உட்பொருள்காண் பார் (பெருந் - 1541) இவரது புதிய உரையை அக்காலத்து மக்கள் புறக்கணித்ததால் இப்பாடலையும் இயற்றி இருக்கக்கூடும். காலம் : இவர் காமத்துப்பாலின் தொடக்கத்தில் வாத்ஸ்யாயனம் என்ற காமநூலைக் குறிப்பிடுகின்றார். அந்நூலாசிரியர் காலம் 11-ஆம் நூற்றாண்டு ஆகும். பரிப்பெருமாள் அக்காலத்திற்குப் பிற்பட்டவர். தமிழ் நூலறிவு பரிப்பெருமாள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை நிரம்பப் பெற்றவர். தம் உரையில் ஏற்ற இடங்களில், பல தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுகின்றார். காமத்துப்பாலில், காதற் சிறப்புரைத்தல் என்னும் அதிகாரத்தில் (1126-1129) தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகின்றார். மெய்ப்பாட்டியலில் 22-ஆம் நூற்பா கூறும் மெய்ப்பாடுகளை நான்கு குறட்பாக்களில் கூறுகின்றார். மெய்ப்பாட்டியல் 22 - எதிர் பெய்து பரிதல்; கண்ணுள்ளிற் போகார் (1126) ’’ - இன்பத்தை வெறுத்தல்; கண்ணுள்ளார் (1127) ’’ - பசியட நிற்றல்: நெஞ்சத்தார் (1128) ’’ - கண் துயில் மறுத்தல்; இமைப்பின் (1129) இவ்வாறே காமத்துப்பாலின் தொடக்கத்தில் தொல்காப்பியக் களவியல் (14) சூத்திரம் இறையனார் அகப்பொருள் சூத்திரமும் இவரது உரையில் இடம் பெறுகின்றன. பிரிவாற்றாமை அதிகாரத்தின் தொடக்கத்தில், பிரிவு பற்றி இறையனார் அகப்பொருள் கூறும் சூத்திரம் ஒன்றும் ஆளப்பட்டுள்ளது. |