பக்கம் எண் :

உரையாசிரியர்கள்380

பரிமேலழகியான்’ என்று இவரைக் குறிப்பிடுவதால் மதுரையில் இவர்
வாழ்ந்தவர் என்பது பெறப்படும். இரு கருத்துகளையும் இணைத்து
நோக்கும்போது, பரிமேலழகர் ஒக்கூரில் அரசியலில் தலைமை பூண்ட
குடியில் பிறந்து, பின் புலமைச் செல்வராய் விளங்கி, தமிழ் வளர்த்த
மதுரையில் தங்கித் தமிழ்ப் பணிபுரிந்து வந்தார் என்று கருதலாம்.

     இவரது உரையில், நெல்லை மாவட்டத்துப் பேச்சு வழக்கு
இடம்பெற்றுள்ளது. “செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூ
சூடப்படாதவாறு போல, நன்று மதிக்கப்பட்டார்” என்று பொருட்பாலில்
உள்ள ‘இணர் ஊழ்த்தும்’ (650) என்ற குறளின் சிறப்புரையில் கூறுகின்றார்.
மலர்ந்து, கற்று என்ற சொற்களுடன் ‘வைத்து’ என்ற சொல்லைச்
சேர்த்துள்ளார். வைத்து என்ற சொல்லை இன்றும் பாண்டிய நாட்டு மக்கள்
தம் பேச்சில் வழங்குகின்றனர். எனவே, பரிமேலழகர் பாண்டிய நாட்டைச்
சேர்ந்தவர் என்பது உறுதிப்படுகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில்
பரிமேலழகர் என்ற பெயருடைய பலர்க்கு நினைவாகப் பல இடங்களில்
கல்லறைகள் உள்ளன.1

     இன்னொரு சாரர் பரிமேலழகரைக் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்
என்பதற்குச் சான்றுகள் காட்டுகின்றனர். தொண்டை மண்டலச் சதகம் (41).
“திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன், வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்” என்று
கூறுகின்றது.

     13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்த விசய கண்ட
கோபாலன் என்னும் தெலுங்குச் சோழனின் 22-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.
1271) எழுந்த கல்வெட்டு ஒன்று, ‘வண்துவரப் பெருமாளான பரிமேலழகிய
பெருமாள் தாதன்’ என்ற பெயரைக் குறிப்பிடுகின்றது.
இப்பெயருடையாரிடமிருந்து நிலம் ஒன்று வாங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
இக் கல்வெட்டுக் குறிப்பிடும் பரிமேலழகிய பெருமாள் தாதன் என்பவரே
உரையாசிரியர் பரிமேலழகராக இருக்கலாம் என்பர்.2

சமயம்

    பரிமேலழகர், வைணவ சமயத்தினர் என்பதற்கு, சான்றுகள் பல உள்ளன.

     ‘மடியிலா மன்னவன்’ என்னும் குறளில் (610), அடியளந்தான்
என்பதற்கு, ‘தன் அடியளவானே எல்லா


 

1. முருக தனுஸ்கோடி - மணிவிழா மலர் (1967) பக்.74, 75.

2. சாசனத் தமிழ்க்கவி சரிதம் (1937) பக்கம் - 114 - 118. மு. இராகவ
  ஐயங்கார்.