என்ற குறளுக்கு உரை எழுதியபின், வேறு உரைகளாக மூன்று கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். “இளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல்” என்பது மணக்குடவர் உரை. “அதனைப் பின்னும் பிறன் ஒருவன்பாற் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்” என்பது பரிதியார் உரை. மூன்றாவது கருத்தைக் கூறிய உரையாசிரியர் யார் என்று இன்று நமக்குத் தெரியவில்லை. தருமர் நச்சர் தாமத்தர் ஆகியவர்களில் யாரேனும் ஒருவர் கூறியதாக இருக்கலாம். ‘வன்கண் குடிகாத்தல்’ என்ற குறள் உரையில் (632) வேறு இரண்டு உரைகளைக் குறிப்பிடு்கின்றார். இன்னும் சில இடங்களில் பரிமேலழகர் மற்ற உரையாசிரியர்களை எல்லாரும் உரைத்தார் (643), பிறர் எல்லாம் உரைத்தார் (817, 1069, 1262) என்று சுட்டுகின்றார். பரிமேலழகர் பிறர் உரைக்கருத்துகளை ஆழ்ந்து பயின்று தெளிவு பெற்றதுடன், காலிங்கர் உரையின் சிறப்பியல்புகளுள் ஒன்றான தனித்தமிழ் நடையை மேற்கொண்டுள்ளார். பிற உரையாசிரியர்களின் நல்லியல்புகளுடன் பரிமேலழகரின் ஆழ்ந்த இலக்கண அறிவும் வடமொழிப் பயிற்சியும் தமிழ் இலக்கியப் புலமையும் அவர் உரைக்கு ஆக்கம் தந்தன. ஆதலின், அவர் உரை ஏனைய உரைகளை எல்லாம் வென்று மேலோங்கியது. திருவள்ளுவரைப் பற்றி திருவள்ளுவரைப்பற்றிப் பரிமேலழகர் கூறும் கருத்துகள் மிகச் சிறந்தவை; திருவள்ளுவர் நெஞ்சத்தை அளந்து அறிந்து, புலமை மாண்பை அளவிட்டுக் கூறப்பட்டவை. “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு” (322) என்று திருவள்ளுவரைப் பற்றிக் கூறுகின்றார். இங்கே கூறப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பொருள் ஆழம் உடையதாகும். முரண்பாடு நீக்கல் ஊழிற் பெருவலி யாவுள (380) என்று கூறிய திருவள்ளுவர், ஊழையும் உப்பக்கம் காண்பர் (620) என்று கூறுகின்றார். இவை மாறுபட்ட கருத்துகளாக இருப்பதை உணர்ந்த பரிமேலழகர், “ஊழ் ஒரு காலாக இரு காலாக அல்லது விலக்கல் ஆகாமையின், பலகால் முயல்வர் பயன் எய்துவர் |