பக்கம் எண் :

உரையாசிரியர்கள்386

     ‘குற்றம் இல்லாதார் உலகத்து இன்மையின்’ என்று கூறுவது இவரது
உலக அறிவை உணர்த்தும் (793).

     நல்குரவு என்னும் அதிகாரத்தில், சிறந்த அறிஞர்கள்
வறுமையுடையவராய் இருப்பின், அவர்களது சிறந்த பேச்சும் பயனற்றுப்
போகும் என்பதற்குக் காரணம் கூறுகின்றார். “யாம் இவர் சொல்லியன
விரும்பிக் கேட்குமாயின், கண்ணோடி இவர் உறுகின்ற குறைமுடிக்க
வேண்டும் என்று அஞ்சி யாவரும் கேளாமையின் பயனில் சொல்லாய்
முடிதல்” (1046).

     வறியனைச் சுற்றத்தார் நீக்கிவிடுவர் என்பதற்கு, “கொள்வது இன்று
ஆதலேயன்றி, கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச்
சுற்றத்தார் யாவரும் துறப்பர்” என்ற காரணம் கூறுகி்ன்றார் (1047).

     புறங்கூறாமை என்றும் அதிகாரத்தில் ஒரு குறளில் (186) “தன்னைப்
புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவன்
இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளைநாடி, ஏதிரே கூறும்” என்று
உரைக்கின்றார்.

     தும்மும்போது மூச்சுடன் உயிரும் போய்விடுமோ என்றஞ்சி ‘நூறு
ஆயுள்’ என்று மகளி்ர் வாழ்த்துதலையும் (1312), அன்புடையார் நினைத்த
வழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்ற மகளி்ர்
வழக்கினையும் (1317) இவர் குறிப்பிடுகின்றார்.

     இவையேயன்றி மக்கள் பேச்சு வழக்கினைக் குறிப்பிடும் இடங்களும்
உண்டு.

     ‘நெருப்பை நெருப்பாகவே கருது’ என்றாற்போல (602), ‘ஒருவர் கூறை
எழுவர் உடுத்து’ என்றாற்போல (1269) என்ற இடங்களில் தம் காலத்துப்
பேச்சு வழக்கினை அறிந்து எழுதுகின்றார்.

தமிழ் நெஞ்சம்

    பரிமேலழகரின் தமிழ்ப்பற்றும், பண்பட்ட உள்ளமும் வெளிப்படும்
வகையில், உரைஎழுதும் இடங்கள் சில உண்டு.

     ‘பழங்கடி’ என்ற (955) சொற்றொடருக்குத் ‘தொன்று தொட்டு வருகின்ற
குடி’ என்று பொருள் கூறி, ‘தொன்று தொட்டு வருதல் - சேர சோழ
பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்’
என்று விளக்குகின்றார்.

     மானம் என்ற அதிகாரத்தின் முதற் குறள் உரையில் (961) ‘இறப்ப
வருவழி இளி வந்தன செய்தாயினும் உய்க’ என்னும்