பக்கம் எண் :

39

பதிப்பகத்தாரின்

பாராட்டுரை 

     மணிவாசகர் பதிப்பகம் ‘உரையாசிரியர்கள்’ என்னும் அரிய பெரிய
நூலை 1968-இல், இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது
வெளியிட்டது.

     உரையாசிரியர்கள் பற்றிய முதல் நூலாகவும், முதன்மையான நூலாகவும்
அது அமைந்து விட்டது. இத்துறையில் பின் வந்த நூல்கள் அனைத்துக்கும்
அதுவே மூல நூலானது. உரையாசிரியர் பற்றிய கலைக் களஞ்சியம் என,
அதனை அறிஞர் போற்றினர். அதன் தனிச் சிறப்புகளை விமர்சகர்கள்
வியந்து பாராட்டினர்.

    அந்நூல், தமிழ் கூறும் நல்லுலகுக்கும் மணிவாசகர் பதிப்பகத்தை இனங்
காட்டியது. தரமான நூல்களைப் பதிப்பிக்கும் தகுதிபடைத்த நிறுவனம்
மணிவாசகர் பதிப்பகம் என்னும் பெருமையினைப் பெற்றது. நூலாசிரியர்க்குப்
பொன்னும் பொருளும் புகழும் தந்தது. உரையாசிரியர் பற்றிய ஆய்வுக்கு
அந்நூல் வழிகாட்டியாக அமைந்ததல்லாமல் வரிச்சட்டமாகவும் அமைந்தது.
உரையாசிரியர்களின் பரந்து விரிந்த உலகை அது திட்ப நுட்பத்துடன்
விளங்கிக் காட்டியது.

     அதனுடைய இரண்டாம் பதிப்பு, மிகவும் விரிந்து வளர்ந்தது. தமிழ்
ஆராய்ச்சி வளர்ச்சியின் இரண்டாவது கட்டமாக அந்நூல் ஒளிபரப்புகிறது.
செய்திகள் மட்டுமல்லாமல் தீர்வுகளும், முடிவுகளும் திட்பமுடன்
வரையறுக்கப் பெற்றன. அதன் வீச்சு, தமிழ் ஆய்வுலகில் மிகப்பெரிய
செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.

     அரிய பெரிய ஆய்வு நூல்கள் தமிழ் நாட்டில் இரண்டாவது பதிப்பு
காண்பது என்பது முயற்கொம்பு. இந்நூல் இரண்டாம்