பக்கம் எண் :

உரையாசிரியர்கள்392

பொருள்

    “கொடியவர் என்றது தீக்கொளுவுவார் நஞ்சிடுவார், கருவிற் கொல்வார்,
கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார், பிறனில் விழைவார் என்றிவர்
முதலாயினாரை. இவரை வட நூலார் ஆத தாயிகள் என்ப” (550).

     “வட நூலார் இவற்றுள் பொருத்துதலைச் சந்தி என்றும், பிரித்தலை
விக்கிரகம் என்றும் கூறுப” (663).

     “வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும்
கூட்டித் தூதரை தலை இடை கடை என்று வகுத்துக் கூறினாராதலின் அவர்
மதமும் தோன்றத் தலை என்றார்” (687).

     “வடநூலாரும் இக் கருத்தான் விதனம் என உடன் கூறினார்” (920).

இன்பம்

     காமத்துப்பால் தொடக்கம்: “வட நூலுள் போசராசனும் ‘சுவை பல என்று கூறுவர் கூறுக; யாம் கூறுவது இன்பச் சுவை ஒன்றையுமே’ என இதனையே மிகுத்துக் கூறினான்”.

     காமத்துப்பால் முடிவு (1330): “ஈண்டுப் பிரிவினை வடநூல்
மதம்பற்றி, செலவு ஆற்றாமை விதுப்பு புலவி என நால்வகைத் தாக்கிக்
கூறினார். அஃதேல் வடநூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும்
கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள்
இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும்,
முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்து உளதாவதல்லது உலகியல்பாய்
வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க”.

பல்கலைப் புலமை

    பரிமேலழகர் இலக்கிய இலக்கண நூல்களையேயன்றி வேறு சில
நூல்களையும் அறிந்துள்ளார். இவரது உரைகளில் அறத்துப்பாலில்
அற நூல்களையும் சமய நூல்களையும் அறிந்த புலமை வெளிப்படும்;
பொருட்பாலில் அரசியல் அறிவு புலப்படும்; காமத்துப்பாலில் இன்பத்துறை
நூலறிவு தோன்றும்.

     அறத்துப்பாலில் “எழுபிறப்பும் தீயவை” (62) என்ற குறளின்
விளக்கவுரையில், எழுவகைப் பிறப்பையும் கூறும் வெண்பாவை மேற்கோள்
தருகின்றார்.

    ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
    நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச் - சீரிய