பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த அந்தமில்சீர்த் தாவரநா லைந்து. இந்த வெண்பா கூறும் கணக்குப்பற்றி ஆராய்ந்து முடிவு செய்யாமல், இப்படியும் ஒரு வகை சிந்தனை தமிழறிஞர் உள்ளத்தில் எழுந்துள்ளது என்று போற்ற வேண்டும். இசைப்புலமை பொருட்பாலில் “பண் என்னாம் பாடற்கு’ (573) என்ற குறளின் விளக்கவுரையில் இசைப்புலமை தோன்ற உரை எழுதுகின்றார்: “பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்று மூன்று. பாடல் தொழில்களாவன: யாழின் கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் என்னும் ஐந்தும் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம்”. மருத்துவ நூலறிவு மருந்து என்ற அதிகாரத்திற்கு, பரிமேலழகர் தம் மருத்துவ நூலறிவு தோன்ற உரை எழுதுகின்றார். ‘மிகினும் குறையினும்’ (941), ‘உற்றவன் தீர்ப்பான்’ (950) ஆகிய இரு குறட்பாக்களின் உரை விளக்கம் படித்து மகிழத்தக்கன. ‘அற்றது அறிந்து’ (944) என்ற குறளுரையில் மருத்துவக் கலையின் நுட்பத்தை வெளிப்படுத்துகின்றார். “தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வன” என்ற விளக்கம் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர் காலத்தில், நோயைத் தீர்த்தற்கு உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய முறைகள் இருந்தன (948) அரசியல் நூல் அறிவு பொருட்பாலில் உள்ள ஒவ்வோர் அதிகாரத்திலும் பரிமேலழகரின் அரசியல் நூல் அறிவு வெளிப்படுகின்றது. ‘இயற்றலும் ஈட்டலும்’ (385) என்ற குறளின் உரையில், பொருள்கள், அவை வரும் வழிகள், அவற்றை அறம் பொருள் இன்பம் என்ற மூவகை வழியில் செலவிடல் ஆகியவற்றை நன்கு விளக்குகின்றார். ‘உற்ற நோய் நீக்கி’ (442) என்ற குறளின் விளக்கத்தில் மக்களுக்கு வரும் துன்பங்களின் வகைகள் அவற்றைப் போக்கும் |