விளையுமோ என்றும், இவ்வாற்றல் கவலை எய்துவர்; கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையர் அல்லராகலான் திருவுடையர் எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு” பரிமேலழகரின் நயவுரையை, ‘கேட்டார்ப் பிணிக்கும்’ (643) ‘வாராக்கால் துஞ்சா’ (1179) ஆகிய குறள் உரைகளிலும் காணலாம். பொருள் விளக்கம் பரிமேலழகர் சில சொற்களுக்கும் தொடர்களுக்கும் மிக விளக்கமாகப் பொருள் எழுதுகின்றார். அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன. 19. தானம்: அறநெறியான் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல். தவம்: மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. விரதம்: இன்ன அறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும் தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன (துறவற இயல் - முன்னுரை). 244. மன் உயிர்: உயிர்கள் எல்லாம் நித்தம் ஆதலின் மன்உயிர் என்றார். வரைவின் மகளிர்: தம் நலம் விலைகொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது, அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வரைவு இல்லாத மகளிர் (வரைவின் மகளிர் - அதிகாரம்). மானம்: எஞ்ஞான்றும் தம் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். பண்பு உடைமை ( அதிகாரத்தின் விளக்கம் ): எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல். 221. குறி எதிர்ப்பை: அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. சொல்லாராய்ச்சி பரிமேலழகர் செய்யும் சொல்லாராய்ச்சி சுவையானது; சிந்தனைக்கு விருந்தாய் அமைவது. கீழே எடுத்துக்காட்டுகள் சில காண்போம்: ஊழ்: அஃதாவது இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி, ஊழ், பால், முறை, உண்மை, |