கூறவேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே யுலகு என உலகின்மேல் வைத்துக் கூறினார்” என்று முதற்குறள் உரைவிளக்கத்தில் எழுதியுள்ளார். இரு வேறு உரைகளையும் ஒப்பிடும்போது, பல சொற்கள் எவ்வித மாறுதலும் இன்றி ஒத்திருப்பதை அறியலாம். பரிமேலழகர் உரை சிவஞான முனிவரைப் பெரிதும் கவர்ந்துள்ளது என்பதை உணரலாம். 2 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் (114) என்ற குறளில் உள்ள எச்சம் என்ற சொல்லுக்கு நன்மக்கள் என்று பொருள் கொண்டுள்ளார் பரிமேலழகர். சிவப்பிரகாசர் பிரபுலிங்கலீலை என்னும் நூலில், தக்கவர் தகவிலர் என்பது ஆங்கவர் பயந்த புதல்வனால் தெளிய அறிமின்’ என்று அறைகுவர் பெரியோர் (அக்கமா - உற் - 20) என்ற இடத்தில் பரிமேலழகர் கருத்தை மேற்கொண்டுள்ளார். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். (969) என்ற குறளின் விளக்கவுரையில், “உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண், பின்னும் போவதாய உயிரை நீத்து எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம்” என்று கூறியுள்ளார். இக்கருத்தைச் சிவப்பிரகாசர், மானமும் உயிரும் ஒருங்குநில் லாத வழியுயிர் தன்னையே விடுத்து தானுறு பொருளாய் மானமே கொளுமுன் தந்தைதன் செவிப்படில் என்னாம் (பிரபு தேவர் வந்த - 77) என்று பிரபுலிங்கலீலையில் எடுத்தாண்டுள்ளார். பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (978) என்ற குறளின் விளக்கவுரையில், “இதற்கு உயந்தார் தாழ்வர், தாழ்ந்தார் உயர்வார் - இஃது ஒரு விரோதம் இருந்தவாறு என் |