பக்கம் எண் :

415ஆய்வு

செல்லுகின்றன. பரிமேலழகரின் உரையில் குறை காண்பவர்கள் இவர்
கொண்ட கருத்திலும் கொள்கையிலுமே குறை காண்கின்றனர்;
கோட்பாடுகளை எதிர்க்கின்றனர்; மறுக்கின்றனர்.

     குறைகாண்போர்களையும் இரு பிரிவினர்களாக ஆக்கலாம். ஒரு சாரார்,
பரிமேலழகர் உரை திருவள்ளுவரின் உள்ளக் கருத்தைப் பல இடங்களில்
விளக்காமல் போகின்றது என்று மறுப்பர். மற்றொரு சாரார் பரிமேலழகர்
வடமொழிக் கருத்தைத் தமிழ் நூலாகிய திருக்குறளில் வலிந்து புகுத்திவிட்டார்
என்று எதிர்ப்பர். இவ்விரு சாராரும் தத்தம் கருத்துக்களை வெளிப்படுத்தி
வரைந்த கட்டுரைகளும், நூல்களும், நிகழ்த்திய சொற்பொழிவுகளும்
பலவாகும்.

     இத்தகைய குறைபாடுகள் பரிமேலழகருக்கு முற்பட்ட
உரையாசிரியர்களிடமும் உள்ளன. ஆனால், முன்னைய உரைகள்
யாவற்றையும் வென்று விளங்கும் பரிமேலழகரே மறுப்புக்கும் எதிர்ப்புக்கும்
ஈடுகொடுத்து நிற்கின்றார். இனி மறுப்புரைகளையும் எதிர்ப்புரைகளையும்
காண்போம்.

1

     வீரசோழியம் என்ற இலக்கண நூலுக்கு உரை கண்ட பெருந்தேவனார்,

    எனைத்தொன் றினிதேகாண் கமாந்தாம் வீழ்வார்
    நினைக்க வருவதுஒன் றுண்டு                    (1202)

என்ற குறளை மேற்கோளாகக் காட்டுகின்றார். (வீரசோழியம் - 152 உரை)
இங்குக் காட்டப்பட்ட குறளில் சிறிது வேறுபாடு உள்ளது. ‘நினைக்க வருவது
ஒன்று உண்டு’ என்பது பெருந்தேவனார் கொண்ட பாடம். ஆனால்
பரிமேலழகர்,

          நினைப்ப வருவது ஒன்று இல்

என்று பாடம் கொண்டுள்ளார்.

     வீரசோழிய உரையை, பரிமேலழகர் உரையைப் பயின்ற யாரோ
ஒருவர் இருவேறு பாடங்களையும் ஆராய்ந்துள்ளார். அவர் கருத்து, பழைய
குறிப்பு என்ற பெயருடன் அடிக்குறிப்பாக (பவானந்தம்பிள்ளை பதிப்பில்)
இடம் பெற்றுள்ளது. அந்தப் பழைய குறிப்பு, பரிமேலழகர் உரைக்கு
மறுப்பாக உள்ளது.

     “இல் என்று பாடம் ஓதித் துன்பம் எதிர்நிலை எழுவாயாகக்
கொண்டார். பரிமேலழகர் இனிதே என முன்னர் நிறுத்தினமையானும்
துன்பம் இல்லா வழி எல்லாம் இன்பமே