பக்கம் எண் :

உரையாசிரியர்கள்416

உளது என்பது சாத்தியம் ஆகாமையானும், புணர்ந்துழியும் பிரிந்துழியும்
இனிமையுண்மை கூறலே நாயனார் கருத்து ஆதலானும், அஃது சிறப்பன்று
என மறுக்க. அன்றியும் உண்டு என்பதே பழம் பிரதிகளின் பாடமுமாம்”.

    பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பரிமேலழகர் உரைக்கு மறுப்பு
எழத் தொடங்கிவிட்டது என்பதை இப்பகுதி உணர்த்தும்.

2

     சிற்றிலக்கியங்கள் பல இயற்றிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,
பரிமேலழகர் உரையை இரண்டு இடங்களில் மறுத்துள்ளார்.

    அறுத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை           (37)

என்ற குறளுக்குப் பரிமேலழகர், “அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம
அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவுவானோடு
செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னாலே உணரப்படும்” என்று உரை
எழுதுகின்றார்.

     இவ்வுரை சிவப்பிரகாசருக்கு உடன்பாடன்று. திருநாவுக்கரசர்,
திருப்பூந்துருத்தி என்னும் தலத்தில், திருஞானசம்பந்தருடைய பல்லக்கை
ஒரு சமயம் சுமந்து சென்றார். இங்கே சிவிகையைச் சுமந்தவர், சிவிகையில்
அமர்ந்தவர் இருவரும் உயர்ந்தவர்களே. ஒருவர் செய்யும் தொழிலையும்
நிலையையும் கொண்டு அவர் தகுதியை மதிப்பிட முடியாது; சிவிகையை
சுமப்பவர், சிவிகையில் அமர்ந்து செல்வோர் இடையே ‘இதுதான் அறம்;
நல்ல அறம் செய்தவர் சிவிகையில் அமந்து செல்கின்றார்’ என்று கூற
வேண்டா என்பதே மேலே கண்ட குறளுக்குச் சிவப்பிரகாசர்  கண்ட
உரையாகும். தம் கருத்தை அவர், நால்வர் நான்மணி மாலை என்ற நூலில்
ஒரு பாடல் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.

    அறுத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
    பொறுத்தா னோடூர்ந்தான் இடையே - மறுத்தார்,சம்
    பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்று
    உந்தும் சிவிகையினை ஊர்ந்து
                                       (நால்வர் நான். 33)

    இப்பாடலில் அப்பர், சம்பந்தரின் சிவிகையைச் சுமந்த நிகழ்ச்சியைப்
பாடிப் பரிமேலழகர் உரையை மறுக்கின்றார் சிவப்பிரகாசர்.