பக்கம் எண் :

417ஆய்வு

3

    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற                   (61)

என்ற குறளின் விசேடஉரையில், அறிவறிந்த என்றதனான், மக்கள் என்னும்
பெயர் பெண் ஒழித்து நின்றது என்று எழுதுகின்றார். வாழ்த்துபவரும் “நல்ல
ஆண் மகனைப் பெறுக” என்றே வாழ்த்துகின்றனர்.

     இவ்வாறு வாழ்த்துவதையும், பரிமேலழகர் கருத்தையும் இன்று
மறுப்பவர் உண்டு: வன்மையாகக் கண்டிப்பவர் உண்டு. ஆனால்,
சிவப்பிரகாசர் பல ஆண்டுகளுக்கு முன்னரே, பெண்ணின் பெருமையை
உணர்ந்து பெண்ணை இழிவுபடுத்தும் பொல்லாத வழக்கத்தை எதிர்த்துள்ளார்.
பெரியநாயகியம்மை கலித்துறையில்,

     கற்றார் அறிகுவார் மக்கள்தம் பேறெனக் கட்டுரைத்த
     சொற்றான் ஒருபெண் ஒழித்ததென் பாரொடு தொல்லுலகில்
     நற்றாண் மகற்பெறுக என்றுஆசி சொல்பவர் நாணஉனைப்
     பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே
                                   (பெரியநாயகி - 12)

என்ற பாடலில் தம் கருத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

4

    திருக்குறளில் உள்ள அறத்துப்பால், மனுநீதி முதலிய வடமொழி நூலின்
கருத்துக்களை உரைக்கின்றது என்பது பரிமேலழகரின் கருத்து.

     உரைப்பாயிரத்தில், “மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான்
எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு
என்பன. அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன
செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம்” என்று கூறுகின்றார். இல்லற இயலின்
இறுதியில் (240ஆம் குறள் உரை) “இனி, மனு முதலிய அற நூல்களால்
பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக்கூறிய
இவற்றுள்ளே அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க; யாம் உரைப்பின்
பெருகும்” என்று உரைக்கின்றார்.

     மனுநீதி நால்வருணத்தையும் சாதி முதலிய கட்டுப்பாடுகளையும்
வற்புறுத்திகின்றது என்றும், வேத நெறியைப் போற்றுகின்றது என்றும்கூறி,
திருக்குறளில் அத்தகைய கருத்துக்கள் இல்லையென்று எடுத்துக்காட்டிப்
பரிமேலழகர்