பக்கம் எண் :

உரையாசிரியர்கள்418

உரையை எதிர்ப்பர் சிலர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணீய
நாடக நூலின் பாயிரத்தில்.

    வள்ளுவர்செய் திருக்குறளை
         மறுவறநன்கு உணர்ந்தோர்கள்
    உள்ளுவரோ மநுவாதி
         ஒருகுலத்துக்கு ஒருநீதி

என்று எழுப்பியுள்ள புதுக்குரல், பரிமேலழகரின் கருத்தை எதிர்த்து, தமிழகம்
எங்கும் பலமுறை எதிரொலிக்கின்றது.

5

     பரிமேலழகர் வடமொழிக் கருத்தை வலிந்து புகுத்திய இடங்கள் பல
உள்ளன. பொருட்பாலில்,

    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறம்தெரிந்து தேறப் படும்                          (501)

என்ற குறள் உரையில், இக்குறள் வடநூலார் கொள்கையின்படி அற உபதை,
இன்ப உபதை, அச்ச உபதை என்ற நால்வகை உபதைகளைக் கூறுவதாய்க்
கூறி அவ்வுபதைகளை வடநூலார் கூறிய வண்ணம் விளக்குகின்றார். “இவ்
வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது பிறர்
எல்லாம் இதனை ‘உயிர் எச்சம்’ என்று பாடம் திருத்தித் தத்தமக்குத்
தோன்றியவாறே உரைத்தார்” என்று ஏனைய உரையாசிரியர்களையும்
மறுக்கின்றார்.

     காமத்துப்பாலின் இறுதியில், “ஈண்டுப் பிரிவினை, வடநூல் மதம்
பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்து ஆக்கிக்
கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றைமையுள்ளும்; ஆற்றாமை படர்
மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின்
விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சொடு
புலத்தல் முதல் ஊடல் உவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க” என்று
எழுதுகின்றார்.

     இவ்வாறு வடமொழிக் கருத்தை வலிந்து புகுத்திய இடங்கள் பல
உள்ளன.

     தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் திருவள்ளுவரது காமத்துப்பாலில்,
பரத்தையர் பிரிவு இல்லை என்றும் அப் பிரிவைத் தலைவனுக்கு
ஏற்படுத்தாமலேயே மருதத்திணைபாடி மிக உயர்ந்த ஊடலைத் திருவள்ளுவர்
உணர்த்தியுள்ளார் என்றும் வள்ளுவரும் மகளிரும் என்ற ஆராய்ச்சி நூலில்
(1930) பல