இவற்றை எல்லாம் நோக்கும்போது, குடம்பை தனித் தொழிய என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரை பொருத்தமாய் இல்லை. 3 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணம்தழீஇ யற்று (913) என்ற குறளின் விளக்கவுரையில் பரிமேலழகர், இருட்டறையில் ஏதில் பிணம் தழீஇயற்று என்ற உவமையின் பொருத்தத்தை, “கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாதோர் இடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போடு ஓக்கும்” என்று விளக்குகின்றார். இந்த விளக்கத்தைப் படிக்கும்போது நமக்குச் சில ஐயங்கள் தோன்றுகின்றன. 1. கூலிக்குப் பிணம் எடுப்பார் என்று பொருள் கொள்ளுவதற்குக் குறளில் இடம உண்டா? 2. பிணம் எடுப்பார் இருட்டறையில் பிணத்தைத் தழுவக்காரணம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. ஏனைய உரையாசிரியர்கள் இவ்வுவமையை வேறு வகையாய் விளக்குகின்றனர்: “பொருட் பெண்டிரது பொய்ம்மை முயக்கம் இருட்டறையின் உள்ளே கிடந்ததொரு வேற்றுப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியது போலும்” என்ற விளக்கம் பொருத்தமாய் உள்ளது. 3. பரிபாடல் உரை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலுக்குப் பரிமேலழகரே உரை எழுதினார் என்பது அறிஞர்கள் கண்ட முடிபு. பரிமேலழகர், திருக்குறளுக்கு எழுதிய உரைக்கு உரை கண்ட இரத்தினக் கவிராயர், நுண்பொருள் மாலையில், “பரிபாட்டினுள் மழையிருஞ்சூல் என்பதனை முன் பின்னாகத்தொக்க இரண்டாம் வேற்றுமைத்தொகை என்றார் இவ்வுரையாசிரியர் (குறள் 216)” என்று கூறுகின்றார். பரிபாடலைப் பதிப்பித்த டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் முன்னுரையில், “நுணுகி ஆராயின், திருக்குறள் உரையிலும் இவ்வுரையிலும் (பரிபாடல் உரையிலும்) ஒத்த கருத்துகளும் ஆசிரியர் |