பரிமேலழகருடைய கொள்கைகளும் பல காணலாம்’ என்று எழுதியுள்ளார். பரிபாடலின் உரைச் சிறப்புப்பாயிரம், சிற்றறி வினர்க்கும் தெற்றெனத் தோன்ற மதியின் தகைப்பு விதியுளி அகற்றி எல்லையில் சிறப்பின் தொல்லோர் பாடிய அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச் சுருங்கிய உரையின் விளங்கக் காட்டினன் நீன்நிலம் கடந்தோன் தாள்தொழு மரபின் பரிமே லழகன் உரிமையின் உணர்ந்தே என்று பரிமேலழகரைப் புகழ்ந்து கூறுகின்றது. பரிமேலழகர் வைணவ சமயத்தினர் என்பதற்குப் பரிபாடல் உரையும் சான்றாக உள்ளது. உரைச் சிறப்புப்பாயிரம், நீள்நில் கடந்தோன் தாள்தொழு மரபின் பரிமே லழகன் என்று கூறுகின்றது. பரிபாடலின் பழைய ஏட்டுப் பிரதிகளில், விரும்பி அருள்நீல வெற்புஇமயக் குன்றின் வரும்பரிசு புள்ஊரும் மாலே! - சுரும்பு வரிபாட லுன்சீர் வளர்துளவத் தோளாய்! பரிபாட லின்சீர்ப் பயன் என்ற பாடல் காணப்படுகின்றது. இப்பாடல் பரிபாடல் உரைக்குப் பரிமேலழகர் கூறிய கடவுள் வணக்கமாக இருக்கலாம் என்று டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் கருதுகின்றார். பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரையின் இயல்புகளைப் பற்றி ஐயர் பின்வருமாறு கூறுகின்றார்: “இந்த உரை பலவிடத்துப் பொழிப்புரையாயும்; சில இடத்துப் பதவுரையாயும்: சில இடத்துக் கருத்துரையாயும்; சிறிதும் புலப்படாத சொற்களின் பழைய வடிவங்களைப் புலப்படுத்தியும்; உரிய இடங்களில் இலக்கணக் குறிப்புகளைப் பெற்றும்; சில இடத்து மிக அழகான பதசாரத்துடன் கூடியும்; விளங்காத சிலவற்றைத் தக்க தமிழ் நூல் மேற்கோள்களாலும் வேதம் உபநிடதம் முதலியவற்றின் கருத்துகளாலும் விளக்கியும் மிக விரிவாக அமைந்துள்ளது.” பொழிப்புரை பரிமேலழகர் பரிபாடலின் சில அடிகளுக்கு ஒரு சேரப் பொழிப்புரை திரட்டித் தருகின்றார். அத்தகைய இடங்களில் |