3-21
3-31 | தீ செங்கனலி-எல்லாம் தீகின்ற செந்நெருப்பு; எல்லாம் தீதற்குக் காரணமாகிய செந்நெருப்பு என்றவாறு.
கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல்-கூந்தல்மா என்று கண்டார் சொல்லும் வடிவொடு வந்த கேசி.
கூந்தலை உடைய மாவைக் ‘கூந்தல்’ என்றும், பெயரினை உடைய வடிவைப் பெயரினை உடைய வடிவைப் பெயர் என்றும் கூறினார், ஆகுபெயரான்.
கேசி குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன்; இப் பெயர் கேசம் என்னும் வடமொழி முதனிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றி, ‘கூந்தல்’ என்றார். |
3-35
7-84
17-53
13-1
8-15
20-81 | வித்திடுபுலம் மேடாயிற்று-நாற்றங்கால் வண்டலிட்டு மேடாயிற்று.
பேஎ நீர் - ஆழத்தான் அச்சத்தைத் தரும் நீர்.
ஏம வைகல் - பிறவித் துன்பம் சாராத வைகல்.
மங்குல் ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு; இதனை ‘நோய் மருந்து’ என்றாற்போலக் கொள்க.
ஒரு நிலைப் பொய்கை - வற்றாப் பொய்கை.
நீ அன்பன் எற்கு அன்பன்-நீ சால அன்பு பூண்டவன் என்மாட்டு அன்புடையான். |
காரணம் கூறி விளக்கம் |
3-77 10-11 | பாழ் - புருடன். சாங்கியர் பிறிதொன்று பிறத்தற்கு இடன் ஆகாது என்ப ஆகலான், அவர் மதம் பற்றிய புருடனைப் ‘பாழ்’ என்றார். ஈண்டுத் தத்துவம் கூறுகின்றமையின். ஏணிப்படுகால் - இருகோவை முதல் முப்பத்து இருகோவை ஈறாக ஒன்றற்கு ஒன்று வடம் ஏறுதலான் மேகலையை ‘ஏணிப் படுகால்’ என்றார். |
10-13 11-88 13-29 | மூஉய் - மூடுதல் உடைமையால் பூப்பெட்டியை ‘மூஉய்’ என்றார். மழபுலவர் - இளைய புலவர்: கல்வி தொடங்கின அளவாதலின் மழபுலவர் என்றார். அறி துயில் - யோக உறக்கம் ஆதலால் அறிதுயில் எனப்பட்டது. |