19-98 படையும் பவழக் கொடி நிலம் கொள்ளும் - குருதி தோய்ந்துழி அல்லது அந் நிறம் இயல்பு அன்மையின் கொள்ளும் என்றார். 11-81 அம்பா ஆடல் என்று தைந் நீராடற்குப் பெயர் ஆயிற்று. தாயோடு ஆடப்படுதலின். 2-69 வாயடை - வாயின்கண் அடுக்கப்படுதலின் உணவிற்கு வாயடை என்று பெயராயிற்று. 5-37 நொசிப்பு - மனத்தினை ஒன்றாக்கி நுண்ணியதாகக் காண்டலாதலின் சமாதி நொசிப்பு எனப்பட்டது உலக வழக்குக் கூறல் மக்கள் பேச்சில் இடம்பெறும் தொடரும் சொல்லும் உரையில் எடுத்துக்காட்டுகின்றார். 8-21 ‘எதிர்குதிர் ஆகின்று’ - எதிர்குதிர் என்பது, ஓர் உலக வழக்கு. 8-49 மாலைக்குமாலை என்றது, அடிக்கடி என்றாற்போல நின்றது. 8-60 ஈதா என்பது, ஒரு மரூஉ முடிபு; அஃது இக்காலத்து இந்தா என்று வழங்கப்படும். சுட்டுநீண்டது. 18-6 ஏறுமாறு என்பது பகைத்தற்கு ஓர் உலக வழக்கு. 20-13 குதுகுதுப்ப-ஆசைப்பட. சொல்லும் பொருளும் 1-44 மடங்கல்-உலகு உயிர்களினது ஒடுக்கம். 2-27 ‘நின்னிலைத் தோன்றும்’ என்புழி ‘நிலை’ என்பது இடப்பொருட்டாய் நின்றது. 3-8 தருமன்-யமன்; மடங்கல்-அவன் ஏவல் செய்யும் கூற்றம். 4-32 மருந்து - காற்று. 4-18 தாக்கு இரை - எறிந்து எடுக்கும் இரை. 5-14 சால்வ - சால்பினை உடையாய் 10-74 உறு நறவு - வெம்மை மிக்க நறவு 12-21 தேசு - செயற்கை அழகு. ஒளி - கல்வியால் வந்த நிறம். 14-8 மணந்து தணந்தோர் - கூடிப் பிரிந்தோர். 2-38 எதிர் கழறும் - ஒக்கும் |