பக்கம் எண் :

433ஆய்வு

     நல்லவர் வாழ்கின்ற நாட்டில், மழை தவறாமல் பெய்து
வளங்கொழிக்கும் என்ற கருத்தை, பாரதக் கதை அறிவிக்கின்றது (நாடு
கரந்துறை-37).*

     ஒளவை மூதாட்டி மூதுரையில் (10),

    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை

என்று பாடியுள்ளார்.

2

     மன்னவன் செங்கோல் தவறினால் மழைபெய்யாது என்ற கருத்து,
காப்பியங்களில் உள்ளது.

மணிமேகலை:

    கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
    கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூறும்.     (7:8, 9)

    வானம் மும்மாரி பொழிக; மன்னவன்
    கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக.       (1:33,34)

சிலப்பதிகாரம் :

    செங்குட்டுவன் கூற்று:

    மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
    பிழையுயிர் எய்தின் பெரும்பே ரச்சம்
    குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
    மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
    துன்பம் அல்லது தொழுதகவு இல்.            (25:100-104)

சீவக சிந்தாமணி:

    கோள்நிலை திரிந்து நாழி
         குறைபடப் பகல்கள் மிஞ்சி
    நீள்நீல மாரி இன்றி
         விளைவு அஃகி, பசியும் நீடி,
    பூண்முலை மகளி்ர் பொற்பின்
         கற்பழிந்து அறங்கள் மாறி
    ஆணைஇவ் வுலகு கேடாம்
         அரசுகோல் கோடின் என்றான்.          (253)



* விராட பருவம் படித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இன்றும்
  மக்களிடம் உள்ளது.