பக்கம் எண் :

உரையாசிரியர்கள்434

3

    ஒழுக்கம் தவறாத மகளிர்க்காக மழைபெய்யும் என்பதைப் பின் வருகின்ற
செய்யுட் பகுதிகள் அறிவிக்கின்றன:

    அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.
                                       (கலி. 39-6)
    மழைவளம் தரூஉம்
    பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்.
                                   (மணி. 22; 45, 46)
    வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்.
                                   (மணி. 22; 53)
    தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்
    பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்.
                                   (மணி. 22; 65-70)
மூன்று மழை:

    விவேக சிந்தாமணி, முன்னர்க்கூறிய சான்றோர் செங்கோல் மன்னர்
கற்புடை மகளிர் ஆகிய மூவர்க்காவும தவறாமல் மாதம் மூன்று மழை
பெய்யும் என்ற கூறுகின்றது.

    வேதம் ஓதிடும் வேதியர்க்கு ஓர்மழை
    நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை
    மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
    மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!
                                   (விவேக-21)

    இந்தச் செய்திகளை மனத்தில் கொண்டு,

    தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனெப் பெய்யும் மழை.

என்ற குறளுக்கு விளக்கம் காண வேண்டும்.

     “தெய்வத்தை தொழாமல் கணவனைத் தொழுபவள், தேவையானபோது
பெய் என்று என்று சொன்னவுடனே பெய்கின்ற மழையைப் போன்றவள்”
என்று புதுமைக் கருந்து வலிவிழந்து போகின்றது.

2. அனிச்சமலர்

     அனிச்சம், திருவள்ளுவர் உள்ளம் கவர்ந்த மலர். அதன் மென்மை
அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அவர் தம் நூலில்