பக்கம் எண் :

உரையாசிரியர்கள்436

    வேர்முழுது உலறி நின்ற புழற்கால்
    தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
    வற்றல் மரத்த பொன்தலை ஓதி

என்று வற்றல் மரம் குறிப்பிடப்படுகிறது. “வேர் முதல் முழு மரமும் வற்றி
நின்ற துளைபட்ட அடியினையுடையதும், தேரின் மணிபோலச் சிள்வீடு
எனும் வண்டுகள் ஒலிப்பதும் ஆகிய, வற்றல் என்னும் மரத்தினிடத்தவாய
பொன்னிறம் வாய்ந்த தலையை யுடைய ஓந்தி” என்பது ந.மு. வேங்கடசாமி
நாட்டார் உரை. பிற் குறிப்பில் அவர், “வற்றல்-ஒரு வகை மரம்” என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

     வற்றல்மரம் என்பதற்கு வற்றிய மரம், பட்டுபோன மரம், காய்ந்து
போன மரம் என்றும் பொருள் கொள்ள இடமிருக்கின்றது. ஆனால்,
பட்டுப்போன மரத்தில் சிள்வீடு என்னும் வண்டுகள் தங்கி ஒலிப்பது
இல்லை; ஓந்தி முதலிய உயிர்கள் அதில் வாழ்வதும் இல்லை. எனவே,
‘வற்றல்’ என்பது ஒரு வகை மரம் என்பது பொருத்தமானதாகும்.

     திருவள்ளுவர் தம் நூலில், ‘வற்றல்’ மரத்தைக் குறிப்பிடுகின்றார்;

          அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
         வற்றல் மரந்தளிர்த் தற்று.                  (78)

மக்களைத் திருவள்ளுவர் மரங்களோடு பல இடங்களில் ஒப்பிட்டு உவமை
கூறியுள்ளார். உலகிற்கு நன்மை செய்யும் பண்பாளனிடம் உள்ள செல்வத்திற்கு,

          பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்           (216)

         மருந்தாகித் தப்பா மரத்தற்றால்              (217)

என்ற உவமைகளைக் கூறியுள்ளார். பிறர்க்குப் பயன் படாதவன்
செல்வத்திற்கு ‘நடு ஊருள் நச்சுமரம் பழுத்தற்று’ என்று உவமை கூறுகின்றார்.

     பழுத்த மரமும், மருந்து மரமும் தழைத்து, பூத்து, காய்த்து நிற்பதோடு
மக்களுக்கும் பயன்படுகின்றன; நச்சு மரம் பழுத்தும் பிறர்க்குப் பயன்படாமல்
உள்ளது என்ற கருத்துக்கள் எவற்றை விளக்குகின்றன? மனிதன் தான்
மட்டும் உண்டு, உடுத்து, கிளைத்து, மலர்ந்து மகிழ்வது பயனற்ற வாழ்க்கை.
பழுத்த மரம் போல - மருந்து மரம் போல, பிறர்க்கு நன்மை செய்து
வாழ்வதே மனிதனின் கொள்கையாக இருக்கவேண்டும்.

     அன்பில்லாதவனுடைய வாழ்வு பயனற்றது. தான் மட்டும் உண்டு
உடுத்து மகிழ்வதால், யாருக்கு என்ன பயன்? அவனால்