பக்கம் எண் :

உரையாசிரியர்கள்440

மூட்டிய கவரி மயிரைப் பயன்படுத்தினர். இதனை, ‘கவரி முச்சிய கார்விரி
கூந்தல்’ என்று பதிற்றுப் பத்து (43-1) குறிப்பிடுகின்றது. கவரி, காலப்போக்கில்
சவரி (ஜவுரி) ஆயிற்று.* நிறம் பூசாத வெள்ளைக் கவரி மயிர், சாமரமாகப்
பயன்பட்டது.

     3. கவரிமா, குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது.
அங்குள்ள கடுங்குளிரைத் தாங்கிக்கொள்ள அதன் உடல் முழுதுமுள்ள
மயிர்த்திரள் பயன்படுகின்றது. அதன் மயிர்த்திரட்சியை வெட்டிவிட்டால்
கவரிமா குளிர்தாங்காமல் இறந்து விடும். நம் நாட்டில் மயிர் அடர்ந்த ஆடு
(குறும்பாடு)களின் மயிரைக் கோடை காலத்தில்தான் வெட்டுவர். அப்போதும்,
எதிர்பாரத வகையில் திடீரென்று வரும் மழை, பனிக்காற்று ஆகியவை
தாக்கினால் சில ஆடுகள் இறந்துவிடுகின்றன. குளிர் மிகுந்த இடத்தில்
வாழ்கின்ற கவரிமா தன்னைக் காக்கும் கவசம் போன்ற மயிர்த்திரளை
இழந்துவிடின் உயிர் வாழாது.

     திருவள்ளுவர் கவரிமாவைப் பற்றிய உண்மையான - இயற்கைக்குப்
பொருத்தமான செய்தியை அறிந்து அதனை உவமையாகக் கூறியுள்ளார்:

     “மயிர் நீப்பின் (இழந்தால்) உயிர் வாழாத கவரிமாவைப் போன்றவர்,
மானத்தை இழக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டால்
உயிரைவிடுவர்”

          பொருள்           உவமை

          மானமுடையார்  -    கவரிமா

          மானம்              -    மயிர்த்திரள்

          மானம் இழத்தல் -    மயிர் இழத்தல்

    பொதுத்தன்மை : உயிர்விடுதல்.

இவ்வாறு திருவள்ளுவர் ‘கவரிமா’வை மிகப் பொருத்தமாக உவமை
கூறியுள்ளார். ஆனால், திருக்குறள் உரைகள் இந்த உவமையின்
பொருத்தத்தை விளக்கவில்லை. திருக்குறள் உரையாசிரியர்கள் காலத்தில்
‘கவரிமா’வைப் பற்றிய உண்மையான செய்தி மறைந்து உருவாகிக் குழப்பம்
ஏற்பட்டது. ஆதலின் அவர்கள் பின் வருமாறு கற்பனைச் செய்திகளைப்
பரப்பிவிட்டனர்.

பரிமேலழகர்: தன் மயிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத
            கவரிமாவைஒப்பார், உயிர் நீங்கத் தான் மானம் எய்தும்  
            எல்லைவரின், அதனைத் தாங்காது இறப்பர்.


* கண்பு - சண்பு - சம்பு - ஜம்பு (கோரை); சேரலர் - கேரளர்; கைப்பாணி (கைத்தாளம்) சப்பாணி.