நல்லார், அவரை அரும்பதவுரையாசிரியர் என்று வழங்கினார். சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் இந்திர விழவூரெடுத்த காதை உரையில் (157), “அவைக்களத்தார் ஐந்து எனக் காட்டுவர் அரும்பதவுரை யாசிரியர்” என்று கூறுகின்றார். ‘கருணாமிர்த சாகரம்’ என்ற நூலை இயற்றிய மு. அபிரகாம் பண்டிதர் தம் நூலில் அரும்பதவுரையாசிரியரின் கருத்துகளைக் கூறி அவற்றைக் கூறியவர் செயங்கொண்டார் என்று குறிப்பிடுகின்றார். அரும்பதவுரையாசிரியருக்கு அப் பெரியவர் செயங்கொண்டார் என்று பெயரிடக் காரணம் என்ன என்பது விளங்கவில்லை. காலமும் சமயமும் அடியார்க்கு நல்லார்க்கே அரும்பதவுரையாசிரியரின் பெயர் முதலிய வரலாறு தெரியவில்லை எனின், அவரது காலப் பழமை நன்கு விளங்கும். உரையின் தொடக்கத்தில் அரும்பதவுரையாசிரியர் விநாயக வணக்கம் கூறுகின்றார். கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனை வேண்டி-அரும்விழ்தார்ச் சேரமான் செய்த சிலப்பதிகா ரக்கதையைச் சாரமாய் நாவே தரி என்ற வெண்பா இவரது உரையின் தொடக்கத்தில் உள்ளது. விநாயகரை வணங்கும் இவர் சைவர் என்பது உறுதி. தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றிது ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலாகும். கி.பி. 642-இல் சிறுத்தொண்டர் மேலைச்சாளுக்கியரைவென்று அவர்களின் தலைநகரான வாதாபியிலிருந்து விநாயகரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார். இதன் பின்னரே விநாயகர் வணக்கம் தமிழகத்தில் பரவியது. விநாயக வணக்கம் நூலின் தொடக்கத்தில் கூறும் வழக்கம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஏற்பட்டது.1 எனவே, அரும்பதவுரையாசிரியரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் என்பது தெளிவாகின்றது. அரும்பதவுரையாசிரியர்க்கு முன்னரும் சில உரைகள் சிலப்பதிகாரத்திற்கு இருந்தன என்பது இவர் உரையால் விளங்கு 1. இலக்கிய ஆராச்சியும் கல்வெட்டுக்களும் (டி.வி. சதாசிவப் பண்டாரத்தார்) பக்கம் - 89-100. |